புதிய மாடல்களை குவிக்கும் ஹார்லி டேவிட்சன்... 3 புதிய மாடல்கள் அறிமுகம்!

By Saravana

இந்தியாவில் பிரிமியம் மோட்டார்சைக்கிள் மார்க்கெட்டில் தனது இடத்தை தக்க வைக்கும் விதத்தில், மூன்று புதிய மாடல்களை ஹார்லி டேவிட்சன் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது.

பிரேக் அவுட், சிவிஓ லிமிடேட், ஸ்ட்ரீட் கிளைடு ஸ்பெஷல் ஆகிய புதிய பைக் மாடல்கள் தற்போது இந்தியாவில் களமிறக்கப்பட்டுள்ளது. கூடுதல் விபரங்கள், அறிமுக விழாவில் எடுக்கப்பட்ட படங்களை ஸ்லைடரில் காணலாம்.


விலை

விலை

பிரேக் அவுட் மாடல் ரூ.16,28,000 விலையிலும், ஸ்ட்ரீட் கிளைடு மாடல் ரூ.29,70,000 விலையிலும், சிவிஓ மாடல் ரூ.49,23,793 விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அனைத்தும் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலை.

பிரேக்- அவுட் சிறப்பம்சங்கள்

பிரேக்- அவுட் சிறப்பம்சங்கள்

பிரேக்- அவுட் மாடலில் 1,690சிசி ஏர்கூல்டு எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. இது 130என்எம் டார்க்கை வெளிப்படுத்தும். 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் கொண்டது. சாஃப்ட்டெயில் அடிப்படையிலான இந்த மோட்டார்சைக்கிள் இந்தியாவிலேயே அசெம்பிள் செய்யப்பட உள்ளது.

 ஸ்ட்ரீட் கிளைடு சிறப்பம்சங்கள்

ஸ்ட்ரீட் கிளைடு சிறப்பம்சங்கள்

ஸ்ட்ரீட் கிளைடு மாடலில் 138என்எம் டார்க்கை அளிக்கும் 1,690சிசி ட்வின்- கேம் ஏர்கூல்டு எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த மாடலில் புளுடூத், யுஎஸ்பி போர்ட் வசதி கொண்ட 6.5ஜிடி இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் பொருத்தப்பட்டிருப்பது முக்கிய சிறப்பம்சம். ஏபிஎஸ் பிரேக் சிஸ்டமும் நிரந்தர அம்சமாக இருக்கும்.

சிவிஓ மாடல் சிறப்பம்சங்கள்

சிவிஓ மாடல் சிறப்பம்சங்கள்

இந்த புதிய மோட்டார்சைக்கிளில் 1,801டிடி ட்வின்- கேம் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. அதிகபட்சமாக 156என்எம் டார்க்கை அளிக்கும். இது லிமிடேட் எடிசன் மாடலில் விற்பனை செய்யப்பட உள்ளது. முழுக்க முழுக்க மனித ஆற்றல் மூலம் அசெம்பிள் செய்யப்படும். ஏராளமான கஸ்டமைஸ் வசதி கொண்ட மாடல் இது.

 ஹார்லி டேவிடன்சன் பலம்

ஹார்லி டேவிடன்சன் பலம்

தற்போது இந்தியாவில் 15 டீலர்ஷிப்புகள் மூலம் தனது பிரிமியம் மோட்டார்சைக்கிள்களை ஹார்லி டேவிட்சன் விற்பனை செய்து வருகிறது. இதுவரை 6,000க்கும் அதிகமான பைக்குகளை இந்தியாவில் விற்பனை செய்து வருகிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் பெங்களூர் மற்றும் புனே நகரங்களில் புதிய டீலர்ஷிப்புகளை துவங்க திட்டமிட்டுள்ளது.

More from DriveSpark

Article Published On: Friday, October 31, 2014, 11:24 [IST]
English summary
American cruiser bike manufacturer Harley-Davidson has launched three new motorcycles in India on 30th October, 2014. New to their range of products is the Breakout, CVO Limited and Street Glide Special. Altogether the manufacturer now offers 13 motorcycles in India.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+