ஸ்கூட்டர் மார்க்கெட்டில் ஹீரோவுக்கு எழுச்சி: ஹோண்டாவுக்கு வீழ்ச்சி!

ஹீரோஹோண்டா நிறுவனங்கள் பிரிந்த பின் ஹீரோவும், ஹோண்டாவும் நேரடி போட்டியாளர்களா மாறிவிட்டன. பைக் மார்க்கெட்டில் ஹீரோ முன்னிலை வகித்து வரும் நிலையில், ஸ்கூட்டர் மார்க்கெட்டில் ஹோண்டாதான் நம்பர்-1 அந்தஸ்தை தக்க வைத்து வருகிறது.
இந்த நிலையில், கடந்த சில மாதங்களாக ஹோண்டாவின் ஸ்கூட்டர் விற்பனை வீழ்ச்சி கண்டு வருகிறது. சியாம் வெளியிட்டுள்ள விற்பனை விபர அறிக்கையில், டிசம்பருடன் முடிவடைந்த காலாண்டில் ஹீரோவின் ஸ்கூட்டர் விற்பனை 20.6 சதவீதம் அதிகரித்துள்ளது. அதேவேளை, ஹோண்டாவின் விற்பனை 8 சதவீதம் வீழ்ச்சி கண்டுள்ளது.
இது மட்டுமில்லாமல் நடப்பு நிதி ஆண்டில் ஏப்ரல் முதல் ஜனவரி வரையிலான காலக்கட்டத்தில் ஹோண்டாவின் மார்க்கெட் பங்களிப்பு 43.93 சதவீதம் குறைந்திருக்கிறது. இது அந்த நிறுவனத்துக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது. இதேகாலக்கட்டத்தில் ஹீரோவின் மார்க்கெட் பங்களிப்பு 21.3 சதவீதமாக உயர்ந்திருப்பதாக சியாம் வெளியிட்டுள்ள அறிக்கை தெரிவிக்கிறது.


Click it and Unblock the Notifications








