புதிய ஹீரோ டீலக்ஸ் ஈக்கோ பைக் விற்பனைக்கு வந்தது! - விபரம்!

By Saravana

மேம்படுத்தப்பட்ட புதிய ஹீரோ டீலக்ஸ் பைக் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த இந்த புதிய ஹீரோ எக்ஸ்எஃப் ஈக்கோ என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது.

ஹீரோ டீலக்ஸ் பைக்கில் சில மாற்றங்கள் மற்றும் கூடுதல் அம்சங்களை சேர்த்து புதிய பிராண்டு பெயரில் ஹீரோ வெளியிட்டிருக்கிறது. ஹீரோ எக்ஸ்எஃப் பைக்கில் 7.7 பிஎச்பி பவரை அளிக்கும், 97.2 சிசி எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. 4 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் கொண்டது.

Hero HF Deluxe Eco

டீலக்ஸ் ஈக்கோ என்ற பெயரிலான இந்த பைக் பச்சை வண்ணத்தில் வெளிவந்துள்ளது. மறுவடிவமைப்பு செய்யப்பட்ட ரியர் வியூ கண்ணாடிகள், உராய்வுத் தன்மை குறைவான டயர்கள் போன்றவை சிறப்பசங்களாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சைடு ஸ்டான்டு இண்டிகேட்டர், கிளியர் லென்ஸ் இண்டிகேட்டர் விளக்குகள், அலாய் வீல்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த பைக்கின் ஏரோடைனமிக்ஸ் சிறப்பாக இருக்கும் விதத்தில் மாற்றப்பட்டுள்ளது.

ரூ.50,500 என்ற டெல்லி ஆன்ரோடு விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள ஹீரோ டீலர்களில் இந்த புதிய பைக் விற்பனைக்கு கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

More from DriveSpark

Article Published On: Monday, March 10, 2014, 13:48 [IST]
English summary
Hero Motocorp has launched its commuter motorcycle, HF Deluxe Eco priced at at Rs.50,500. The company has also showcased this HF-Deluxe Eco at the 2014 Auto Expo.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+