ஸ்டார்ட்/ ஸ்டாப் சிஸ்டத்துடன் விற்பனைக்கு வந்தது புதிய ஸ்பிளென்டர்!

புதிய மாடல்களை தொடர்ந்து வரிசை கட்டி வருகிறது ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம். சில தினங்களுக்கு முன் டீலக்ஸ் ஈக்கோ என்ற புதிய மாடலை விற்பனைக்கு கொண்டு வந்தது. இதைத்தொடர்ந்து, தற்போது ஸ்டார்ட் ஸ்டாப் சிஸ்டம் கொண்ட புதிய ஸ்பிளென்டர் பைக்கை விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது.

கார்களில் கொடுக்கப்படும் இந்த புதிய தொழில்நுட்பத்தை முதல்முறையாக பைக்கில் அறிமுகம் செய்துள்ளது ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம். அதிக எரிபொருள் சிக்கனத்தை வழங்கும் இந்த புதிய தொழில்நுட்பம் கொண்ட ஹீரோ ஸ்பிளென்டர் ஐஸ்மார்ட் பைக்கின் கூடுதல் சிறப்பம்சங்களை ஸ்லைடரில் காணலாம்.

ஐ3எஸ் தொழில்நுட்பம்

ஐ3எஸ் தொழில்நுட்பம்

ஸ்பிளென்டர் என்எக்ஸ்ஜி பைக்கில்தான் இந்த புதிய ஸ்டார்ட் ஸ்டாப் சிஸ்டம் தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய ஸ்டார்ட் ஸ்டாப் தொழில்நுட்பத்தை ஐ3எஸ் என்று அழைக்கிறது ஹீரோ மோட்டோகார்ப்.

எஞ்சின்

எஞ்சின்

இந்த பைக்கில் 7.8 பிஎஸ் பவரையும், 8.04 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் 100சிசி ஏர்கூல்டு எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. 4 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் கொண்டது.

வண்ணங்கள்

வண்ணங்கள்

ஸ்போர்ட்ஸ் ரெட், லீஃப் க்ரீன், எக்ஸ்செல்லன்ட் புளூ, ஹெவி கிரே ஆகிய வண்ணங்களில் கிடைக்கும். ஸ்லைடுகளில் கொடுக்கப்பட்டுள்ளது.

ஸ்டார்ட்/ ஸ்டாப் சிஸ்டம்

ஸ்டார்ட்/ ஸ்டாப் சிஸ்டம்

இந்த பைக்கில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் ஐ3எஸ் ஸ்டார்ட் ஸ்டாப் சிஸ்டத்துக்கு ஹீரோ மோட்டோகார்ப் காப்புரிமைக்கு விண்ணப்பித்துள்ளது. சிக்னல் உள்ளிட்ட இடங்களில் குறிப்பிட்ட வினாடிகளுக்கு மேல் வண்டி நிற்கும்போது எஞ்சின் தானாக அணைந்துவிடும். கிளட்ச் பிடிக்கும்போது மீண்டும் எஞ்சின் உயிர்ப்பித்துவிடும். இந்த ஸ்டார்ட் ஸ்டாப் சிஸ்டத்தை தேவையில்லாத சமயங்களில் அணைத்து வைப்பதற்கு சுவிட்ச் ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது.

 புதிய மாடல்கள்

புதிய மாடல்கள்

இந்த புதிய ஸ்டார்ட் ஸ்டாப் சிஸ்டத்தை இதர பைக் மாடல்களிலும் அறிமுகம் செய்ய ஹீரோ மோட்டோகார்ப் திட்டமிட்டுள்ளது.

விலை விபரம்

விலை விபரம்

சென்னையில் ரூ.48,192 விலையிலும், பெங்களூரில் ரூ.48,014 விலையிலும், டெல்லியில் ரூ.47,250 விலையிலும், மும்பையில் ரூ.49,967 விலையிலும் கிடைக்கும். இங்கே கொடுக்கப்பட்டிருக்கும் விலை விபரம் அனைத்தும் எக்ஸ்ஷோரூம் விலையை அடிப்படையாகக் கொண்டது.

More from DriveSpark

Article Published On: Friday, March 14, 2014, 10:06 [IST]
English summary
Hero MotoCorp's new Splendor iSmart has been launched. Announced for the first time late last year and showcased for the public at the Auto Expo 2014, the new Splendor iSmart is unlike any other Splendor model which have preceded it.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+