ஊதிய உயர்வுக்காக பட்டினி போராட்டத்தில் குதிக்கும் ஹீரோ தொழிலாளர்கள்!

ஊதிய உயர்வு ஒப்பந்தம் தொடர்பாக ஹீரோ மோட்டோ கார்ப் நிறுவனத்துக்கும், அதன் குர்கான் ஆலைத் தொழிலாளர்களுக்கும் கடந்த சில மாதங்களாக பல கட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருகின்றன.
நிரந்தர தொழிலாளர்களுக்கு மாதம் ஒன்றுக்கு ரூ.15,000 ஊதிய உயர்வை வழங்க தொழிற்சங்கங்கள் கோரிக்கை வைத்துள்ளன. ஆனால், ஹீரோ மோட்டோ கார்ப் நிர்வாகம் மாதம் ரூ.7,000 முதல் ரூ.9,000 வரை ஊதிய உயர்வு வழங்குவதாக தெரிவித்து வருகிறது.
ஆனால், இந்த விஷயத்தில் ஒருமித்த முடிவு எட்டப்படவில்லை. இதனால், நிர்வாகத்துக்கு அழுத்தம் கொடுக்க பல்வேறு முயற்சிகளிலும் ஹீரோ மோட்டோ கார்ப் தொழிற்சங்கங்கள் ஈடுபட்டுள்ளன. இதன் ஒருபகுதியாக நாளைமுதல் காலவரையற்ற பட்டினி போராட்டத்தில் ஈடுபட இருப்பதாக அறிவித்துள்ளனர்.
இந்த போராட்டத்துக்கு அதே பகுதியில் இருக்கும் மாருதி கார் ஆலை தொழிற்சங்கங்கள், ஹோண்டா மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் ஆலையை சேர்ந்த தொழிற்சங்கங்களும் ஆதரவு தெரிவித்துள்ளன. பட்டினி போராட்டத்தில் தொழிலாளர்கள் ஈடுபட்டால் ஹீரோ மோட்டோ கார்ப் ஆலையில் இருசக்கர வாகன உற்பத்தி பாதிக்கும் நிலை ஏற்படும்.


Click it and Unblock the Notifications








