ஹோண்டா ஆக்டிவா 125சிசி ஸ்கூட்டர் விற்பனைக்கு வந்தது! - முழு விபரம்

By Saravana

பெரும் எதிர்பார்ப்பை கிளப்பிய புதிய ஹோண்டா ஆக்டிவா 125 ஸ்கூட்டர் இன்று விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. முந்தைய மாடலைவிட அதிக சக்தி கொண்ட மாடலாக வந்திருக்கும் இந்த புதிய ஸ்கூட்டரின் விலை நிச்சயம் விற்பனையை நிர்ணயிகக்கும் காரணியாக இருக்கும்.

இதற்காகவே, பழைய 110 ஆக்டிவா ஸ்கூட்டருக்கும், இந்த புதிய மாடலுக்கான விலை வித்தியாசம் உள்ளிட்ட தகவல்களையும், இந்த புதிய ஸ்கூட்டரில் இடம்பெற்றிருக்கும் முக்கிய அம்சங்களையும் ஸ்லைடரில் காணலாம்.

இரு வேரியண்ட்டுகள்

இரு வேரியண்ட்டுகள்

ஏவியேட்டர் போன்றே இந்த புதிய ஸ்கூட்டரும் இரண்டு வேரியண்ட்டுகளில் விற்பனைக்கு வருகிறது. ஸ்டான்டர்டு மற்றும் டீலக்ஸ் என்ற வேரியண்ட்டுகளில் கிடைக்கும்.

எஞ்சின்

எஞ்சின்

இந்த புதிய ஆக்டிவா 125சிசி ஸ்கூட்டரில் பொருத்தப்பட்டிருக்கும் எச்இடி தொழில்நுட்பம் கொண்ட 124.9 சிசி எஞ்சின் 8.7 எச்பி பவரையும், 10.12 என்எம் டார்க்கையும் அளிக்கும். வி மேட்டிக் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் கொண்டது. லிட்டருக்கு 60 கிமீ மைலேஜ் தரும் என ஹோண்டா தெரிவிக்கிறது.

 கம்பைன்டு பிரேக் சிஸ்டம்

கம்பைன்டு பிரேக் சிஸ்டம்

இந்த புதிய ஸ்கூட்டரில் ஹோண்டாவின் கம்பைன்டு பிரேக்கிங் சிஸ்டம் உள்ளது.

வண்ணங்கள்

வண்ணங்கள்

நீலம், சில்வர், கருப்பு மற்றும் வெள்ளை வண்ணங்களில் புதிய ஹோண்டா ஆக்டிவா 125 ஸ்கூட்டர் கிடைக்கும்.

 சஸ்பென்ஷன்

சஸ்பென்ஷன்

முன்புறத்தில் டெலிஸ்கோப்பிக் சஸ்பென்ஷன் பொருத்தப்பட்டிருக்கிறது. இதனால், ஏவியேட்டர் ஸ்கூட்டரைப் போன்று முன்புறத்தில் 12 இஞ்ச் சக்கரமும், பின்புறத்தில் 10 இஞ்ச் சக்கரமும் பொருத்தப்பட்டிருக்கிறது.

 சென்னை விலை விபரம்

சென்னை விலை விபரம்

சென்னையில் 130மிமீ டிரம் பிரேக்குகள் கொண்ட ஸ்டான்டர்டு மாடல் ரூ.61,800 விலையிலும், முன்புறத்தில் 190மிமீ டிஸ்க் பிரேக் கொண்ட டீலக்ஸ் மாடல் ரூ.68,139 விலையிலும் கிடைக்கும். டிரம் பிரேக் மாடலுக்கும், டீலக்ஸ் மாடலுக்கும் இடையில் ரூ.6,000க்கும் மேல் விலை வித்தியாசம் இருக்கிறது.

விலை வித்தியாசம்

விலை வித்தியாசம்

ஆக்டிவா 110சிசி ஸ்கூட்டரைவிட புதிய ஆக்டிவா 125சிசி ஸ்கூட்டர் வேரியண்ட்டுக்கு தக்கவாறு ரூ.7,000 முதல் ரூ.15,000 வரை கூடுதல் விலையில் வந்துள்ளது. எனவே, புதிய ஆக்டிவா ஸ்கூட்டர் விற்பனையில் எந்தளவு ஹோண்டாவுக்கு தோள் கொடுக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

More from DriveSpark

Article Published On: Wednesday, April 23, 2014, 18:33 [IST]
English summary
Honda Activa 125 has been officially launched as was reported earlier this month. Honda's new 125cc segment automatic scooter brings the iconic Activa name, along with a more powerful, refined engine and premium features, along with few design changes. The Activa 125 is expected to take India by storm, if the price does not become a deterrent.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+