சென்னையில் ஹோண்டாவின் புதிய 150சிசி பைக் விற்பனைக்கு வந்தது

சென்னையில், ஹோண்டாவின் புதிய சிபி டிரிக்கர் 150சிசி பைக் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. கடந்த இரு மாதங்களுக்கு முன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த புதிய பைக் வாடிக்கையாளர்களை கவரும் அம்சங்களுடன் வந்துள்ளது.

டேஸ்லர் பைக்குக்கு மாற்றாக விற்பனைக்கு வந்திருக்கும் இந்த புதிய பைக் வடிவமைப்பில் சிறிய மாற்றங்கள் மற்றும் கூடுதல் வசதிகளுடன் வந்துள்ளது. மூன்று வேரியண்ட்களில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் விற்பனைக்கு வந்திருக்கும் இந்த புதிய பைக்கின் சிறப்பம்சங்கள், சென்னை விலை விபரம் உள்ளிட்ட தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

வடிவமைப்பு

வடிவமைப்பு

சிபி 1000ஆர் பைக்கின் அடிப்படையில் அதிலிருக்கும் அம்சங்களுடன் இந்த புதிய 150சிசி பைக் வடிவமைக்கப்பட்டுள்ளது. கருப்பு நிற புகைபோக்கி குழாய், பக்கவாட்டு கவுல்கள் மற்றும் கம்பீரமான பெட்ரோல் டேங்க் ஆகியவை முக்கிய அம்சங்களாக இருக்கின்றன.

விடிவு

விடிவு

டிஜிட்டல் ஸ்பீடோமீட்டர் ஷைன், யூனிகார்ன் உள்ளிட்ட பைக்குகளில் டிஜிட்டல் டிஸ்ப்ளே இல்லாதது குறையாக இருந்து வருவதை போக்கும் விதத்தில் இந்த பைக்கின் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டர் முழுவதும் டிஜிட்டல் திரை கொண்டதாக இருக்கிறது.

சிபிஎஸ் டிஸ்க் பிரேக்

சிபிஎஸ் டிஸ்க் பிரேக்

ஹோண்டாவின் ஸ்கூட்டர்களில் இருக்கும் சிபிஎஸ் எனப்படும் கோம்பி பிரேக்கிங் சிஸ்டம் முதல்முறையாக இந்த பைக்கில் கொடுக்கப்பட்டுள்ளது. இது கூடுதல் பாதுகாப்பை உறுதி செய்யும். ஆனால், சிபிஎஸ் வசதி கொண்ட வேரியண்ட்டுக்கு ரூ.6,000 கூடுதல் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அதே எஞ்சின்

அதே எஞ்சின்

டேஸ்லர் பைக்கின் அதே 150சிசி எஞ்சின்தான் இந்த பைக்கிலும் பொருத்தப்பட்டிருக்கிறது. இந்த எஞ்சின் 14 எச்பி ஆற்றலையும், 12.5 என்எம் டார்க்கையும் அளிக்கும்.

மைலேஜ்

மைலேஜ்

மைலேஜ் ஹோண்டா சிபி-டிரிக்கர் லிட்டர் பெட்ரோலுக்கு 60 கிமீ மைலேஜ் தரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது ஹோண்டா நடத்திய நடைமுறை சோதனையில் சாத்தியப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வண்ணங்கள்

வண்ணங்கள்

மெட்டியர் கிரீன் மெட்டாலிக், பியர்ல் சியனா, கருப்பு ஆகிய மூன்று வண்ணங்களில் கிடைக்கும்.

இருக்கை

இருக்கை

அகலமான இருக்கை பொருத்தப்பட்டிருப்பதால், குறைந்த தூர மற்றும் நீண்ட தூர பயணங்களுக்கு சிறப்பானதாக இருக்கும். முழுவதுமாக மூடப்பட்ட செயின் கார்டு, கிக் ஸ்டார்ட், ஃபுல் கியர் லிவர் ஆகியவையும் இந்திய சாலை நிலவரங்கள் மற்றும் போக்குவரத்துக்கு ஏற்றதாக இருக்கும்.

 டியூப்லெஸ் டயர்

டியூப்லெஸ் டயர்

டியூப்லெஸ் டயர், பராமரிப்பு தேவையற்ற பேட்டரி, விஸ்காஸ் ஏர் ஃபில்டர் உள்ளிட்ட ஹோண்டாவின் தயாரிப்புகளுக்கு உரிய பிரத்யேக அம்சங்கள் இந்த பைக்கிலும் உண்டு.

வேரியண்ட்கள்

வேரியண்ட்கள்

இந்த பைக் மூன்று வேரியண்ட்களில் கிடைக்கும் என ஹோண்டா தெரிவித்துள்ளது. ஸ்டான்டர்டு வேரியண்ட்டில் முன்பக்கம் டிஸ்க் பிரேக், பின்புறம் டிரம் பிரேக் கொண்டதாக இருக்கும். இரண்டாவது, டீலக்ஸ் வேரியண்ட்டில், முன்புறம், பின்புறம் டிஸ்க் பிரேக் கொண்டதாக இருக்கும். மூன்றாவது வேரியண்ட்டான சிவிஎஸ் வேரியண்ட்டில் முன்புறம், பின்புறம் டிஸ்க் பிரேக்குடன் கோம்பி பிரேக்கிங் சிஸ்டத்துடன் கிடைக்கும். விலை விபரம்

 சென்னை விலை

சென்னை விலை

சென்னை எக்ஸ்ஷோரூம் விலை விபரம்

ஸ்டான்டர்டு: ரூ.71,046

டீலக்ஸ் : ரூ.74,099

சிபிஎஸ் : ரூ.80,715

More from DriveSpark

Article Published On: Monday, July 1, 2013, 12:13 [IST]
English summary
Honda Motorcycle & Scooter India launched its premium 150cc bike, the CB Trigger, for Tamilnadu and Puducherry markets. Honda CB Trigger, available in the following three variants.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+