புதிய 150சிசி பைக்கை அறிமுகப்படுத்திய ஹோண்டா
இந்திய மார்க்கெட்டில் புத்தம் புதிய நேக்டு ஸ்டைல் 150சிசி பைக்கை ஹோண்டா அறிமுகப்படுத்தியுள்ளது. யமஹா எஃப்இசட் வரிசை பைக்குகளுக்கு நேரடி போட்டியை கொடுக்கும் அம்சங்களுடன் வந்திருக்கும் இந்த புதிய பைக்குக்கு ட்ரிக்கர் என்று பெயரிடப்பட்டுள்ளது. சிபி 1000ஆர் பைக்கின் ஸ்டைலிலிருந்து கொஞ்சம் எடுத்து இந்த புதிய 150சிசி பைக்கை வடிவமைத்துள்ளது.
யூனிகார்ன் மற்றும் டேஸ்லர் பைக்குகளுடன் சேர்ந்து இந்த புதிய 150சிசி பைக்கும் ஹோண்டாவின் மார்க்கெட் பங்களிப்பை அதிகரிக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல் மற்றும் கூடுதல் கவர்ச்சி அம்சங்களுடன் வந்திருக்கும் இந்த புதிய ஹோண்டா பைக் இந்திய வாடிக்கையாளர்களை கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எஞ்சின்
இந்த பைக்கில் 149.1சிசி எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. 5 ஸ்பீடு கியர் பாக்ஸை கொண்டுள்ளது.

பவர்
அதிகபட்சம் 14.14 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும்.

பேட்டரி
இந்த பைக்கில் பராமரிப்பு அதிகம் தேவைப்படாத மெயிட்டனென்ஸ் ஃப்ரீ பேட்டரி பொருத்தப்பட்டிருக்கிறது.

எடை
இந்த பைக் 137 கிலோ எடை கொண்டது.

கோம்பி பிரேக்
இந்த பைக்கில் சிபிஎஸ் என்ப்படும் கோம்பி பிரேக்கிங் சிஸ்டம் ஆப்ஷனலாக கிடைக்கும். முன்புறத்தில் டிஸ்க் பிரேக் பொருத்தப்பட்டிருக்கும்.

சஸ்பென்ஷன்
பின்புறத்தில் மோனோஷாக் சஸ்பென்ஷன் உள்ளது.

மைலேஜ்
இந்த பைக் லிட்டருக்கு 60 கிமீ மைலேஜ் தரும் என ஹோண்டா தெரிவிக்கிறது.

முன்பதிவு
அடுத்த மாதம் இந்த புதிய பைக்குக்கு முன்பதிவு துவங்கப்பட உள்ளது. மே முதல் டெலிவிரி துவங்கும் என ஹோண்டா வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications








