ஸ்பிளென்டருக்கு போட்டியாக புதிய 100சிசி பைக்: ஹோண்டா களமிறக்குகிறது

By Saravana
Honda Dream Yuga
அடுத்த ஓரிரு மாதங்களில் புத்தம் புதிய 100சிசி பைக்கை ஹோண்டா அறிமுகப்படுத்த உள்ளது. ட்ரீம் வரிசையில் வரும் இந்த புதிய பைக் ஹீரோ ஸ்பிளென்டருக்கு நேரடி போட்டியாக இருக்கும்.

அடுத்த சில ஆண்டுகளில் இந்திய மார்க்கெட்டில் முதலிடத்தை பிடிக்கும் நோக்கில் வியூகங்களை வகுத்து செயல்பட்டு வருகிறது ஹோண்டா. இதற்காக, அடுத்தடுத்து புதிய மாடல்களை அறிமுகப்படுத்தி வருகிறது.

இந்த நிலையில், நகர்ப்புறம், கிராமப்புறம் என அனைத்து மார்க்கெட்டுகளிலும் 100 சிசி பைக்குகளுக்கான வரவேற்பு அதிகம் இருக்கிறது. இந்த செக்மென்ட்டில் ஹீரோ ஸ்பிளென்டர்தான் விற்பனையில் முதலிடத்தில் இருக்கிறது.

எனவே, ஸ்பிளென்டர் மார்க்கெட்டை உடைக்கும் விதமாக புத்தம் புதிய 100சிசி பைக்கை ஹோண்டா அறிமுகப்படுத்த உள்ளது. K23 என்ற குறியீட்டு பெயரில் இந்த புதிய பைக் வடிவமைக்கப்பட்டு வருவதாக ஹோண்டா வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இன்னும் இரண்டு மாதங்களில் இந்த புதிய பைக் மார்க்கெட்டுக்கு வந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. ட்ரீம் யுகா பிளாட்பார்மில் வடிவமைக்கப்படும் இந்த புதிய பைக்கின் முக்கிய அம்சமே அதிக மைலேஜ் தருவதாக இருக்கும். இந்த புதிய 100சிசி பைக் வாடிக்கையாளர் மத்தியில் பெரும் வரவேற்பை பெறும் என்று ஹோண்டா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

More from DriveSpark

Article Published On: Wednesday, March 27, 2013, 10:44 [IST]
English summary
Japanese two wheeler maker Honda is planning to launch new 100cc bike in Indian market soon. The new bike will give tough competition to Hero Splendor.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+