ரூ.43,150 விலையில் புதிய பைக்கை அறிமுகப்படுத்திய ஹோண்டா!
ரூ.43,150 என்ற மிகக்குறைந்த ஆரம்ப விலையில் புத்தம் புதிய 110சிசி பைக்கை ஹோண்டா விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. ட்ரீம் நியோ என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்த புதிய பைக்கில் 109சிசி எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது.
ஸ்பிளென்டர் உள்ளிட்ட பைக்குகளுக்கு சவால் கொடுக்கும் வகையில் இந்த புதிய பைக்கை மிகக் குறைந்த விலையில் ஹோண்டா களமிறக்கியுள்ளது. இந்த புதிய பைக் லிட்டருக்கு 74 கிமீ மைலேஜ் தரும் என ஹோண்டா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிக் ஸ்டார்ட், டிரம் பிரேக், ஸ்போக்ஸ் வீல் மாடல் ரூ.43,150 விலையிலும், கிக் ஸ்டார்ட், டிரம் பிரேக், அலாய் வீல் மாடல் ரூ.44,150 விலையிலும், எலக்ட்ரிக் ஸ்டார்ட், டிரம் பிரேக், அலாய் வீல் மாடல் ரூ.47,240 விலையிலும் விற்பனைக்கு கிடைக்கும். அனைத்தும் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையை அடிப்படையாகக் கொண்டு கணக்கிடப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








