அதே விலை, கூடுதல் அம்சங்களுடன் ஹோண்டா ட்ரீம் யுகா!
பண்டிகை காலத்தையொட்டி வாடிக்கையாளர்களை கவர்வதற்கு வாகன நிறுவனங்களிடையே போட்டா போட்டி ஏற்பட்டுள்ளது. தங்களது தயாரிப்பு பக்கம் ஈர்ப்பதற்காக பல்வேறு சலுகைகள் மற்றும் சிறப்பு பதிப்புகளை வழங்கி வாடிக்கையாளர்களை திசை திருப்பும் முயற்சிகள் துவங்கியுள்ளன.
ஹோண்டா இருசக்கர வாகன நிறுவனமும் இந்த முயற்சியில் இறங்கியுள்ளது. ட்ரீம் யுகா பைக் அறிமுகம் செய்யப்பட்டு ஓர் ஆண்டில் இதுவரை 3 லட்சம் பைக்குகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதனை கொண்டாடும் விதமாக, ட்ரீம் யுகா பைக்கில் கூடுதல் ஆக்சஸெரீஸ்களை இணைத்து புதிய லிமிடேட் எடிசன் மாடலை விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. லிமிடேட் எடிசன் ட்ரீம் யுகாவில் இடம்பெற்றிருக்கும் கூடுதல் அம்சங்கள் பற்றிய விபரங்களை ஸ்லைடரில் காணலாம்.

இரட்டை வண்ணம்
டூயல் டோன் எனப்படும் இரட்டை வண்ணக் கலவையில் கலக்கலாக வந்திருக்கிறது ட்ரீம் யுகா.

பாடி கலர் ஆக்சஸெரீஸ்
பாடி கலரில் ரியர் வியூ கண்ணாடிகள் மற்றும் கிராப் ரெயில் பொருத்தப்பட்டிருக்கின்றன.

3டி லோகோ
3டி லோகோ, பாடி டீகெல்ஸ் ஆகியவை கூடுதலாக பொறிக்கப்பட்டுள்ளன.

குரோம் வேலைப்பாடு
குரோம் பூச்சுடன் சைலன்சர் மேல் பாதுகாப்பு கவச பட்டை, மஃப்ளர் புரொடெக்டர் ஆகியவை பொருத்தப்பட்டு இருக்கின்றன.

எஞ்சின்
ட்ரீம் யுகாவில் 8.5 பிஎஸ் பவரை அளிக்கும் ஏர் கூல்டு எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது.

மைலேஜ்
சமீபத்தில் எச்இடி தொழில்நுட்பத்துடன் இந்த பைக்கின் எஞ்சின் மேம்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம், லிட்டருக்கு 74 கிமீ மைலேஜ் தரும் என ஹோண்டா தெரிவித்துள்ளது.

சிறப்பம்சங்கள்
ட்யூப்லெஸ் டயர்கள், அடிக்கடி பராமரிப்பு தேவையற்ற பேட்டரி ஆகியவை குறிப்பிட்டு கூறலாம்.

சென்னை ஆன்ரோடு விலை
கிக் ஸ்டார்ட் மாடல்: ரூ.54,985
கிக் ஸ்டார்ட், அலாய் வீல்: ரூ.56,595
எலக்ட்ரிக் ஸ்டார்ட், அலாய் வீல்: ரூ.58,888


Click it and Unblock the Notifications








