ஸ்பிளென்டர் போட்டியாளரை இன்று அறிமுகப்படுத்தும் ஹோண்டா
புத்தம் புதிய 100சிசி பட்ஜெட் பைக்கின் டீசர் படத்தை தனது இணையதளத்தில் ஹோண்டா வெளியிட்டிருக்கிறது. அடுத்த சூப்பர்ஸ்டார் என்ற வாசகத்தோடு இன்றைக்கு அறிமுகம் செய்யப்படுவதாக டீசரில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
ஸ்பிளென்டர் மார்க்கெட்டை துண்டாடும் நோக்குடன் ஹோண்டா களமிறக்க இருக்கும் இந்த புதிய பைக் இன்று அறிமுகம் செய்யப்பட்ட கையோடு, விற்பனைக்கும் கொண்டு வரப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஹோண்டாவின் 110சிசி ட்ரீம் யுகா பைக்கின் அடிப்படையில் இந்த புதிய பைக் வடிவமைக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஹோண்டாவின் தயாரிப்புகளுக்கு மிகுந்த வரவேற்பு இருக்கிறது.
இந்த நிலையில், அந்த நிறுவனம் இன்று அறிமுகம் செய்ய இருக்கும் புதிய பைக் வாடிக்கையாளர் மத்தியில் ஏகோபித்த ஆதரவை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புதிய பைக்கை பற்றிய செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள டிரைவ்ஸ்பார்க்கை பின்தொடருங்கள்.


Click it and Unblock the Notifications








