இந்தியா வரும் மணிக்கு 440கிமீ வேகத்தில் பறக்கும் சூப்பர் பைக்!

பார்முலா1 காரை விட மூன்று மடங்கு கூடுதல் வேகம், புகாட்டி வேரோன் ஸ்போர்ட் சூப்பர் காரை ஓரங்கட்டும் வலிமை, இவைதான் ஒய்2கே சூப்பர் பைக்கின் அறிமுகத் தகவல். இந்த பைக்குடன் ஒப்பிடும்போது சுஸுகி ஹயபுசா கூட ஹீரோ ஸ்பிளென்டர்தான். அமெரிக்காவை சேர்ந்த மரைன் டர்பைன் டெக்னாலஜீஸ்(எம்டிடி) நிறுவனம்தான் இந்த பைக்கை தயாரிக்கிறது.

இதன் வரிசையில் ஏற்கனவே தயாரிக்கப்பட்ட இரு மாடல்களை விட கூடுதல் பவர் கொண்டதாக வந்திருக்கிறது ஒய்2கே. இந்த ஆண்டு மத்தியில் இங்கிலாந்தில் விற்பனைக்கு வர இருக்கும் இந்த பைக் தற்போது காற்றியக்கவியல் சோதனைகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த பைக்கை இந்தியாவில் விற்பனை செய்யும் திட்டம் எம்டிடி வசம் உள்ளது. இந்தியாவில் விவா மோட்டார்ஸ்போர்ட்ஸ் என்ற நிறுவனம் இந்த பைக்கை இறக்குமதி செய்து விற்க விருப்பம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஒய்2கே

ஒய்2கே

2000ம் ஆண்டில் முதல் ஒய்2கே பைக் அறிமுகம் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து, 2008ல் ஒய்2கே ஸ்ட்ரீட் ஃபைட்டர் அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது இந்த வரிசையில் ஒய்2கே ஹைப்பர் பைக் வருகிறது.

 எஞ்சின்

எஞ்சின்

ஹெலிகாப்டர்களில் பொருத்தப்படும் ரோல்ஸ்ராய்ஸ் அல்லிஸன் 250 சி 20 பி கேஸ் டர்பைன் எஞ்சின்தான் இந்த பைக்கில் பொருத்தப்பட்டிருக்கிறது.

பவர்

பவர்

இந்த பைக்கில் பொருத்தப்பட்டிருக்கும் எஞ்சின் 420 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் திறன் கொண்டது.

உந்துசக்தி

உந்துசக்தி

புகாட்டி வரோன் சூப்பர் கார் 0-180 கிமீ வேகத்தை 5.4 வினாடிகள் தொடும். ஆனால், இந்த பைக் 5.4 வினாடிகளில் 0-320 கிமீ வேகத்தை எட்டும் ஆற்றல் கொண்டது.

முக்கிய அம்சங்கள்

முக்கிய அம்சங்கள்

அதிக எரிபொருள் நிரப்புவதற்கான பெரிய டேங்க், சிறந்த பேலன்ஸ் தரும் அகலமான டயர்கள், பிரத்யேக கூலிங் சிஸ்டம் ஆகியவை இதன் முக்கிய அம்சங்கள்.

தற்போது இந்தியாவில்...!!

தற்போது இந்தியாவில்...!!

மும்பையில் நடந்த பார்க்ஸ் ராலி பந்தயத்தின்போது இந்த பைக் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது. அதேபோன்று, கோவாவில் நடந்த கடந்த இரு நாட்களாக நடந்த இந்தியா பைக் வீக் திருவிழாவிலும் இந்த பைக் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது. இன்று வெளியிட்டிருந்த ஸ்லைடரில் முதல் படத்தில் பார்க்கும் பைக்தான் இது.

விலை

விலை

அமெரிக்காவில் இதன் விலை ஒரு கோடியாக உள்ளது. இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும்போது ரூ.2 கோடி விலையில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஒய்2கே பெர்ஃபார்மென்ஸ் வீடியோ

ஒய்2கே பெர்ஃபார்மென்ஸ் வீடியோ

More from DriveSpark

Article Published On: Monday, February 4, 2013, 17:16 [IST]
English summary
US based Marine Turbine Technologies (MTT) is planning to launch the Y2K hyperbike in India, has nothing less than a Rolls-Royce Allison 250-series gas turbine engine, usually found in, erm, helicopters.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+