2 புதிய கவாஸாகி பைக்குகள் இந்தியாவில் இன்று விற்பனைக்கு அறிமுகம்!
இந்தியாவில் இன்று 2 புதிய பைக் மாடல்களை கவாஸாகி நிறுவனம் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. 250சிசி பிரிமியம் பிரிவில் இசட்250 என்ற மாடலையும், 600சிசி பிரிவில் இஆர்- 6என் என்ற பைக் மாடலையும் அறிமுகம் செய்துள்ளது.
இசட்800 மற்றும் இசட்1000 பைக்குகளின் டிசைன் அடிப்படையிலான இசட்250 நேக்டு பாடி ஸ்டைல் கொண்டது. நின்ஜா 300 பைக்கிலிருந்து சில டிசைன் அம்சங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்த மோட்டார்சைக்கிளில் 11,000 ஆர்பிஎம்.,மில் 33 பிஎச்பி பவரை அளிக்கும் 250சிசி லிக்யூடு கூல்டு பேரலல் ட்வின் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது.

மற்றொன்று நின்ஜா650 பைக்கின் நேக்டு ஸ்டைல் மாடல். இஆர்- 6என் என்ற பெயரில் வந்திருக்கும் இந்த புதிய பைக்கில் 71 பிஎச்பி பவரையும், 64 என்எம் டார்க்கையும் வழங்கும் 649சிசி ட்வின் சிலிண்டர் லிக்யூடு கூல்டு எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது.
ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் இந்த இரண்டு மாடல்களிலும் ஆப்ஷனலாககூட கொடுக்கப்படவில்லை. ஆனால், எதிர்காலத்தில் இந்த பைக்குகளின் ஏபிஎஸ் மாடல்கள் அறிமுகம் செய்யப்படும் என தெரிகிறது.

புதிய கவாஸாகி இசட்250 பைக் ரூ.2.99 லட்சம் விலையிலும், புதிய கவாஸாகி இஆர்- 6என் பைக் ரூ.4.78 லட்சம் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலைகளில் கிடைக்கும். இந்த புதிய மாடல்கள் கவாஸாகியின் புரோபைக்கிங் ஷோரூம்கள் வழியாக விற்பனை செய்யப்பட உள்ளன.


Click it and Unblock the Notifications








