ரூ.3.5 லட்சத்தில் புதிய நின்ஜா 300ஆர் பைக் அறிமுகம்
நின்ஜா 250ஆர் பைக்குக்கு மாற்றாக புதிய நின்ஜா 300ஆர் பைக்கை கவாஸாகி இன்று விற்பனைக்கு கொண்டு வந்தது. ரூ.3.5 லட்சத்தில் இந்த புதிய பைக் விற்பனைக்கு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக அளவில் பல்வேறு மார்க்கெட்டுகளில் நின்ஜா 300ஆர் ஏபிஎஸ் பிரேக்குடன் விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், தற்போது இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் நின்ஜா 300ஆர் பைக்கில் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் கொண்ட மாடல் அறிமுகம் செய்யப்படவில்லை.
தாய்லாந்தில் உள்ள கவாஸாகி ஆலையில் இருந்து உதிரிபாகங்களாக இறக்குமதி செய்யப்பட்டு புனேயில் உள்ள பஜாஜ் ஆட்டோ ஆலையில் இந்த புதிய பைக் அசெம்பிள் செய்யப்படும் ஹோண்டா சிபிஆர் 250ஆர் மற்றும் ஹயோசங் 250ஆர் பைக்குகளுக்கு புதிய நின்ஜா 300ஆர் பைக் போட்டியை கொடுக்கும். இதுதவிர, விரைவில் வர இருக்கும் பஜாஜ் ஆட்டோவின் 375சிசி பல்சர் மற்றும் கேடிஎம் 390 பைக்குக்கும் போட்டியை கொடுக்கலாம். இரண்டும் பஜாஜ் ஆட்டோவின் கீழ் இயங்கும் நிறுவனங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

கவாஸாகி நின்ஜா 300ஆர்

கவாஸாகி நின்ஜா 300ஆர்
புதிய நின்ஜா 300ஆர் பைக்கில் 39 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் டிஓஎச்சி/8 வால்வ் கொண்ட 296சிசி எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. இந்த எஞ்சின் 27 என்எம் டார்க்கை வெளிப்படுத்தும்

கவாஸாகி நின்ஜா 300ஆர்
172 கிலோ எடை கொண்டது.

கவாஸாகி நின்ஜா 300ஆர்
6 ஸ்பீடு கியர் பாக்ஸ் கொண்டது.

கவாஸாகி நின்ஜா 300ஆர்
0-100 கிமீ., வேகத்தை 7 வினாடிகளில் தொட்டுவிடும்.

கவாஸாகி நின்ஜா 300ஆர்
வெள்ளை மற்றும் பச்சை கலரில் கிடைக்கும்.

கவாஸாகி நின்ஜா 300ஆர்
பின்புறம் 140மிமீ அகலம் கொண்ட டயரும், முன்புறம் 110மிமீ அகலம் கொண்ட டயரும் பொருத்தப்பட்டுள்ளது.

கவாஸாகி நின்ஜா 300ஆர்
17 லிட்டர் பெட்ரோல் டேங்க் பொருத்தப்பட்டுள்ளது.

கவாஸாகி நின்ஜா 300ஆர்
ரூ.3.5 லட்சம் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு வந்துள்ளது.

கவாஸாகி நின்ஜா 300ஆர்
பஜாஜ் ஆட்டோவின் புரொபைக்கிங் ஷோரூம்கள் வாயிலாக இந்த பைக்கை வாங்கலாம். முன்பதிவு வரிசை அடிப்படையில் டெலிவிரி கொடுக்கப்பட உள்ளது. 500 பைக்குகள் தயாராக இருப்பதாக கவாஸாகி தெரிவித்துள்ளது.

கவாஸாகி நின்ஜா 300ஆர்
முன்புறத்தில் 37மிமீ டெலிஸ்கோப்பிக் சஸ்பென்ஷனும், பின்புறத்தில் 5 ஸ்பீடு யூனி டிராக் சஸ்பென்ஷனும் பொருத்தப்பட்டு உள்ளது.

கவாஸாகி நின்ஜா 300ஆர்
முன்புறத்தில் 290மிமீ பெட்டல் டிஸ்க் பிரேக்கும், பின்புறத்தில் 220மிமீ பெட்டல் டிஸ்க் பிரேக்கும் பொருத்தப்பட்டுள்ளது.



Click it and Unblock the Notifications








