ஏபிஎஸ் பிரேக்குடன் வரும் கேடிஎம் டியூக் 390!
ஆன்ட்டி லாக்கிங் பிரேக்கிங் சிஸ்டத்துடன்(ஏபிஎஸ்) டியூக் 390 பைக்கை அறிமுகப்படுத்த கேடிஎம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
டியூக் 390 பைக்குக்கான ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் பாஷ் நிறுவனத்திடமிருந்து பெறப்பட உள்ளது. மேலும், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டத்துக்காக பிரத்யேக இசியூ யூனிட்டும் பொருத்தப்பட உள்ளது. முன் மற்றும் பின் சக்கரங்களின் சுழற்சி வேகத்தை சென்சார்கள் மூலம் உணர்ந்து இந்த பிரேக்கிங் சிஸ்டம் சிறப்பாக வேலை செய்யும் என்பதால் கூடுதல் பாதுகாப்பை தரும்.

டியூக் 390 பைக்கில் 43 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும். கடந்த ஆண்டு இஐசிஎம்ஏ ஆட்டோ ஷோவில் 2013 டியூக் 390 மாடல் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட இருக்கும் மாடல் 150 கிலோ எடை கொண்டதாக இருக்கும்.
புனே அருகே சகனில் உள்ள பஜாஜ் ஆட்டோ ஆலையில் அசெம்பிள் செய்யப்பட உள்ளது. ரூ.2.0 லட்சம் விலையில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








