கேடிஎம் நிறுவனத்தின் புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர் கான்செப்ட்

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்து வரும் மோட்டார்சைக்கிள் ஷோவில் புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர் கான்செப்ட் மாடலை பஜாஜ் ஆட்டோ அங்கமாக செயல்படும் கேடிஎம் பார்வைக்கு வைத்துள்ளது. இ ஸ்பீடு என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்த ஸ்கூட்டர் கேடிஎம் ஃப்ரீரெய்டு இ என்ற டர்ட் பைக்கின் அடிப்படையில்தான் உருவாக்கப்பட்டுள்ளது.

கேடிஎம் நிறுவனத்தின் இரண்டாவது எலக்ட்ரிக் இருசக்கர வாகன மாடலான இ ஸ்பீடு சுற்றுச் சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத அம்சங்கள் கொண்ட நகர்ப்புறத்துக்கான ஸ்கூட்டராக இருக்கும். இது சாதாரண ஸ்கூட்டர் மற்றும் பைக் மாடல்களின் டிசைனிலிருந்து முற்றிலும் வேறுபட்டதாக இருப்பதால் சாலையில் செல்லும்போது நிச்சயம் வெகுவாக கவரும் வகையில் இருக்கும்.

கேடிஎம் முதல் எலக்ட்ரிக் பைக்

கேடிஎம் முதல் எலக்ட்ரிக் பைக்

கேடிஎம் நிறுவனம் முதன்முதலாக ஸீரோ எமிசின் கான்செப்ட்டில் வெளியிட்ட முதல் பைக் ஃப்ரீ ரெய்டு இ. டர்ட் ரகத்தை சேர்ந்த இந்த பைக்கில் பொருத்தப்பட்டிருக்கும் மோட்டார் 29.5 எச்பி ஆற்றலை வெளிப்படுத்துவதாக இருக்கும்.

அடுத்து இது...

அடுத்து இது...

டர்ட் பைக்கை தொடர்ந்து தற்போது இந்த இ ஸ்கூட்டரின் கான்செப்ட் மாடலை கேடிஎம் பார்வைக்கு கொண்டு வந்துள்ளது.

பவர்

பவர்

இந்த பைக்கில் பொருத்தப்பட்டிருக்கும் மோட்டார் 15 எச்பி ஆற்றலையும், 36 என்எம் டார்க்கை வெளிப்படுத்தும்.

பல்க் எடை

பல்க் எடை

இந்த பைக் 309 பவுண்ட் எடை கொண்டது. இது சாதாரண பைக்குகளை விட கூடுதல் எடை கொண்டதாக இருக்கிறது. மணிக்கு அதிகபட்சமாக 85 கிமீ வேகத்தில் செல்லும் திறன் கொண்டது.

பயண தூரம்

பயண தூரம்

ஒரு முறை சார்ஜ் செய்ய 2 மணி நேரம் பிடிக்கும். முழு சார்ஜ் செய்தால் 40 மைல் (65 கிமீ) தூரம் செல்ல முடியும் என கேடிஎம் தெரிவித்துள்ளது.

 பேட்டரி

பேட்டரி

இந்த பைக்கில் பொருத்தப்பட்டிருக்கும் 4.36 கிலோவாட் லித்தியம் அயான் பேட்டரி குறைந்த திறன் கொண்டதாகவே கூறப்படுகிறது.

கவரும் டிசைன்

கவரும் டிசைன்

வித்தியாசமான டிசைன்களால் கேடிஎம் தயாரிப்புகளுக்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் அமோக வரவேற்பு இருக்கிறது. அந்தவகையில், இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கும் வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கலாம்.

More from DriveSpark

Article Published On: Monday, March 25, 2013, 10:55 [IST]
English summary
If the KTM Freeride E was the Austrian motorcycle manufacturer's solution for an emission free dirt bike, then the E-Speed is the extension of the same idea towards urban mobility. The E-Speed electric scooter was unveiled by KTM at the Tokyo Motorcycle Show.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+