மீண்டும் எல்எம்எல்... புதிய 150சிசி ஸ்கூட்டரை விற்பனைக்கு விட்டது!
1980ல் துவங்கி 90ம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில் எல்எம்எல் வெஸ்பா கூட்டணியின் ஸ்கூட்டர் மாடல் மிக பிரபலமாக விளங்கியது. கூட்டணியிலிருந்து வெஸ்பா விலகியதால் சந்தையில் பின்னுக்குத் தள்ளப்பட்டது எல்எம்எல்.
ஃப்ரீடம் பிராண்டிலான பைக்குகளும் விற்பனையில் கைகொடுக்கவில்லை. இந்த நிலையில், மீண்டும் புதிய 150சிசி ஸ்கூட்டரை விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது எல்எம்எல். ஸ்டார் யூரோ என்ற பெயரிலான இந்த ஸ்கூட்டர்தான் தற்போது இந்தியாவின் ஒரே 150சிசி ஸ்கூட்டர் மாடலாக இருக்கும்.
ஏற்கனவே, கியர் ஸ்கூட்டராக விற்பனை செய்யப்பட்ட நிலையில், தற்போது புதிய மாடல் சிவிடி ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் கொண்டதாக விற்பனைக்கு வந்துள்ளது. இந்த ஸ்கூட்டரின் சிறப்பம்சங்கள், படங்களை ஸ்லைடரில் காணலாம்.

சேஸீ
மெட்டல் பாடியுடன் வடிவமைக்கப்பட்டிருக்கும் இந்த ஸ்கூட்டர், வெஸ்பா ஸ்கூட்டர் போன்று மோனோகாக் சேஸீ இல்லை.

வடிவம்
இந்த புதிய ஸ்கூட்டர் 1,760 மிமீ நீளம், 695 மிமீ அகலம், 820 மிமீ உயரம் கொண்டதாக இருக்கிறது. 1,260 மிமீ வீல் பேஸ் மற்றும் 160 மிமீ கிரவுண்ட் கிளியரன்சுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்கூட்டரின் எடை 112 கிலோ.

எஞ்சின்
இந்த ஸ்கூட்டரின் சிங்கிள் சிலிண்டர் ஏர்கூல்டு எஞ்சின் 8,000 ஆர்பிஎம்.,மில் 9 எச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் திறன் கொண்டது.

டாப் ஸ்பீடு
சிவிடி ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் கொண்ட இந்த ஸ்கூட்டர் அதிகபட்சமாக மணிக்கு 90 கிமீ வேகம் வரை செல்லும்.

மைலேஜ்
7 லிட்டர் பெட்ரோல் டேங்க் கொள்ளளவுடன் வந்திருக்கும் இந்த புதிய ஸ்கூட்டர் லிட்டருக்கு 55 கிமீ மைலேஜ் தரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிங்கிள் சஸ்பென்ஷன்
வெஸ்பா மற்றும் ஆக்டிவா போன்றே இந்த ஸ்கூட்டரும் முன்புறத்தில் சிங்கிள் சஸ்பென்ஷன் அமைப்பை பெற்றிருக்கிறது. முன்புறத்தில் டிஸ்க் பிரேக் ஆப்ஷனலாக கிடைக்கும்.

விலை
பேஸ் மாடல் - ரூ.54,014
டிஸ்க் பிரேக் மாடல்: ரூ.57,918
டிஸ்க் பிரேக், மல்டி ஷேட் கலர்: ரூ.59,422
.அனைத்தும் ஆமதாபாத் எக்ஸ்ஷோரூம் விலைகள்.


Click it and Unblock the Notifications








