ரூ.2,000 குறைவான விலையில் புதிய மஹிந்திரா செஞ்சூரோ அறிமுகம்!!

By Saravana

விற்பனைக்கு கொண்டு வரப்பட்டு 6 மாதங்களில் இதுவரை ஒரு லட்சம் மஹிந்திரா செஞ்சூரோ பைக்குகளுக்கு முன்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சந்தோஷமான தருணத்தை கொண்டாடும் விதத்தில், ரூ.2,000 குறைவான விலையில் செஞ்சூரோவின் புதிய வேரியண்ட்டை மஹிந்திரா விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது.

செஞ்சூரோ என்1 என்ற பெயரில் விற்பனைக்கு வந்திருக்கும் இந்த புதிய மாடலில் வசதிகள் அதிகளவில் குறைக்கப்படாமல் வந்துள்ளது முக்கிய அம்சம். குறைந்த விலை செஞ்சூரோவில் உள்ள அம்சங்கள் குறித்த தகவல்கள் ஸ்லைடரில் கொடுக்கப்பட்டுள்ளது.

விலை குறைப்பு

விலை குறைப்பு

புதிய செஞ்சூரோ என்1 பைக்கில் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோலுக்கு பதிலாக அனலாக் ஸ்பீடோமீட்டர் மற்றும் எரிபொருள் மானி பயன்படுத்தப்பட்டுள்ளது. கிராஃபிக்ஸ் ஸ்டிக்கர் இல்லை.

வசதிகள்

வசதிகள்

குறைந்த விலை மாடலாக வந்துள்ளபோதிலும், ஸ்டான்டர்டு மாடலில் இருக்கும் ஆன்ட்டி தெஃப்ட் அலார்ம், எஞ்சின் இம்மொபைலசர், ரிமோட் ஃப்லிப் கீ உள்ளிட்ட அனைத்து வசதிகளும் இந்த மாடலில் இருக்கும்.

எஞ்சின்

எஞ்சின்

எஞ்சினிலும் மாற்றங்கள் இல்லை. 8.5 பிஎச்பி ஆற்றலை அளிக்கும் எம்சிஐ5 எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது.

மைலேஜ்

மைலேஜ்

லிட்டருக்கு 85.4 கிமீ மைலேஜ் தரும் என்று தெரிவிக்கப்படுகிறது.

வாரண்டி

வாரண்டி

இந்த பைக்குக்கு 5 ஆண்டுகளுக்கு வாரண்டி வழங்கப்படுகிறது.

விலை

விலை

ரூ.45,700 டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையில் புதிய மஹிந்திரா செஞ்சூரோ என்1 விற்பனைக்கு வந்துள்ளது. ஸ்டான்டர்டு மாடல் செஞ்சூரோவைவிட இது ரூ.2,000 வரை குறைவாகும்.

More from DriveSpark

Article Published On: Saturday, January 25, 2014, 10:32 [IST]
English summary
Following the massive success of the Centuro commuter motorcycle Mahindra today launched the Centuro N1. The N1 is nothing but a variant of the regular Centuro that costs slightly less. Mahindra Centuro N1 is priced at Rs 46,574 (ex-showroom, Mumbai) and Rs 45,700 (ex-showroom, Delhi) which is about Rs 2,000 less than the regular Centuro.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+