அட்டகாசமான ஸ்டைலில் புதிய மஹிந்திரா ரோடியோ ஸ்கூட்டர் அறிமுகம்!

By Saravana

தோற்றத்திலும், வசதிகளிலும் கூடுதல் அம்சங்கள் நிறைந்த புதிய மஹிந்திரா ரோடியோ யூஇசட்ஓ 125 என்ற பிரிமியம் ஸ்கூட்டர் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

புதிய பாடி கிராஃபிக்ஸ் ஸ்டிக்கர், சிவப்பு வண்ணப் பெயிண்ட் பூசப்பட்ட சக்கரங்கள், பிரேக் பிடிக்கும்போது வழுக்காத அமைப்பு கொண்ட இருக்கை போன்றவை சிறப்பம்சங்களாக உள்ளன.

Mahindra Rodeo UZO

ரோடியோ ஸ்கூட்டரின் ஸ்டான்டர்டு மாடலில் இருக்கும் அதே சிங்கிள் சிலிண்டர் 125சிசி எஞ்சின்தான் பொருத்தப்பட்டிருக்கிது. முன்புறத்தில் டெலிஸ்கோப்பிக் சஸ்பென்ஷன் அமைப்பும், பின்புறத்தில் மோனோஷாக் அப்சார்பரும் கொடுக்கப்பட்டுள்ளது.

டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல் கொடுக்கப்பட்டுள்ளது. ஸ்பீடோமீட்டர், டாக்கோமீட்டர், ஓடோமீட்டர், ட்ரிப் மீட்டர், எரிபொருள் மானி, கடிகாரம், அபாயகர வேகத்தை எச்சரிக்கும் வசதி போன்றவை டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல் மூலம் பெறலாம்.

மொபைல் சார்ஜ் செய்யும் வசதி, இருக்கைக்கு கீழே 22 லிட்டர் ஸ்டோரேஜ் வசதி, ஆன்ட்டி தெஃப்ட் கீ போன்றவையும் கொடுக்கப்பட்டுள்ளன.

ரூ.47,957 டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையில் புதிய மஹிந்திரா ரோடியோ யுஇசட்ஓ மாடல் விற்பனைக்கு வந்துள்ளது. ஊதா, நீலம் மற்றும் இரண்டுவிதமான கருப்பு வண்ணங்களில் கிடைக்கும்.

More from DriveSpark

Article Published On: Friday, August 15, 2014, 10:46 [IST]
English summary
Mahindra hasy launched the sporty new Rodeo UZO 125. With this scooter, Mahindra aims to redefine current benchmarks in the scooter market with head turning style, rally winning performance and unique features.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+