விரைவில் வருகிறது மஹிந்திரா மோஜோ

தற்சமயம் 100சிசி, 150சிசி பைக்குளைவிட தற்போது 200சிசிக்கும் அதிகமான திறன் கொண்ட பைக்குகளை வாங்குவதற்கு இளைஞர்களிடையே ஆர்வம் அதிகரித்திருக்கிறது.
இதனை கருதி புதிய 300சிசி ஸ்போர்ட்ஸ் பைக்கை மஹிந்திரா விரைவில் விற்பனைக்கு கொண்டு வருகிறது. இந்த பைக்கின் இறுதிக் கட்ட சோதனைகள் தற்போது நடந்து வருவதாக மஹிந்திரா நேற்று தெரிவித்தது.
எனவே, இன்னும் ஓரிரு மாதங்களுக்குள் இந்த பைக் மார்க்கெட்டுக்கு வந்துவிடும். ஆனால், ஸ்போர்ட்ஸ் பைக் மார்க்கெட் தற்போது வெளிநாட்டு நிறுவனங்கள் கட்டுப்பாட்டில் இருக்கிறது. கவாஸாகி நின்ஜா 250ஆர், ஹோண்டா சிபிஆர் 250ஆர், ஹயோசங் ஜிடி 250 ஆர் பைக்குகள் இந்த மார்க்கெட்டில் தற்போது இருக்கின்றன.
இந்த நிலையில், 299சிசி திறன் கொண்ட எஞ்சினுடன் மஹிந்திரா விற்பனைக்கு கொண்டு வரும் மோஜோவுக்கு பெரும் நெருக்கடிகள் காத்திருக்கின்றன. ஏனெனில், யுட்டிலிட்டி பயணிகள் வாகன மார்க்கெட்டில் மஹிந்திரா முன்னிலை வகித்தாலும் இருசக்கர வாகன மார்க்கெட்டில் வாடிக்கையாளர்களிடம் நன்மதிப்பை சம்பாதிக்கவில்லை.
மேலும், ஸ்டாலியோ பைக்கில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறால் ஏற்பட்ட அவப்பெயர் இன்னும் வாடிக்கையாளர் மனதில் இருந்து மறையவில்லை. இந்த நிலையில், மேம்படுத்தப்பட்ட ஸ்டாலியோவின் 2 புதிய மாடல்களை சமீபத்தில்தான் களமிறக்கி இருக்கிறது. அந்த பைக்குகள் விற்பனையில் ஓரளவு நல்ல முன்னேற்றம் ஏற்பட்டால் மோஜோவுக்கும் வரவேற்பு கிடைக்கும்.
சிறந்த சர்வீஸ் நெட்வொர்க்கும் தேவையாக இருக்கிறது. தவிர, விலை நிர்ணயத்திலும் மஹிந்திரா அதிக கவனம் செலுத்த வேண்டியிருக்கிறது. பல சவால்களை தாண்டி மோஜோ வெற்றிக் கனியை ருசிக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.


Click it and Unblock the Notifications








