ரூ.39,650ல் பேண்டீரோவின் பேஸ் வேரியண்ட்: மஹிந்திரா அறிமுகம்!
கடந்த ஜனவரி மாதம் பேண்டீரோ பைக்கை மஹிந்திரா அறிமுகம் செய்தது. மூன்று வேரியண்ட்களில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில், வாடிக்கையாளர்களை கவரும் விதமாக மிகக் குறைந்த விலையில் பேண்டீரோவின் பேஸ் வேரியண்ட் தற்போது வந்துள்ளது.
பட்ஜெட் விலை பைக்குகளை விரும்பும் மக்களை கவரும் வகையில் சில கூடுதல் அம்சங்களை குறைத்துவிட்டு இந்த பைக்கை மஹிந்திரா விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. இந்த பைக் குறித்த கூடுதல் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

மஹிந்திரா பேண்டீரோ
தற்போது விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருக்கும் பேஸ் வேரியண்ட் கிக் ஸ்டார்ட்டர், ஸ்போக்ஸ் வீல், அனலாக் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டருடன் வந்துள்ளது.

மஹிந்திரா பேண்டீரோ
பேண்டீரோவில் 110சிசி எம்சிஐ-5 எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. இந்த எஞ்சின் 8.5 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் திறன் கொண்டது.

மஹிந்திரா பேண்டீரோ
லிட்டருக்கு 79.4 கிமீ மைலேஜ் தருமென மஹிந்திரா தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

மஹிந்திரா பேண்டீரோ
ஃபியரி ரெட், ஸ்டெர்லிங் சில்வர், பிளேஸிங் பிளாக், கூல் பிளாக் ஆகிய 4 விதமான வண்ணங்களில் கிடைக்கும்.

மஹிந்திரா பேண்டீரோ
இந்த புதிய பைக்குக்கு 2 ஆண்டுகள் வாரண்டியும், 3 ஆண்டுகள் வரை நீட்டிக்கப்பட்ட வாரண்டியையும் பெற முடியும்.


Click it and Unblock the Notifications








