தமிழகத்தில் மஹிந்திரா பேண்டீரோ அறிமுகம்!
தமிழகம் உள்பட 4 மாநிலங்களில் புதிய பேண்டீரோ மோட்டார்சைக்கிள் கிடைக்கும் என மஹிந்திரா தெரிவித்துள்ளது.
இருசக்கர வாகன மார்க்கெட்டில் தன்னை வலுவாக்கிக் கொள்ளும் முயற்சிகளை மஹிந்திரா செய்து வருகிறது. கடந்த ஜனவரி மாதம் பேண்டீரோ என்ற 110சிசி பைக்கை அறிமுகம் செய்தது.

புதுமையான வசதிகளுடன் வந்த பேண்டீரோவை தற்போது பல கட்டங்களாக நாடு முழுவதும் அறிமுகம் செய்து வருகிறது மஹிந்திரா. இந்த நிலையில், தமிழகத்தில் உள்ள டீலர்களில் பேண்டீரோ பைக் கிடைக்கும் என மஹிந்திரா தெரிவித்துள்ளது.
தமிழகம் மட்டுமின்றி உத்தர பிரதேசம், குஜராத் மற்றும் மஹாராஷ்டிராவில் புதிய பேண்டீரோ கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ரூ.45,000 முதல் ரூ.45,000 வரையிலான எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைக்கும்.
புதிய பேண்டீரோ லிட்டருக்கு 79.4 கிமீ மைலேஜ் தரும் என அராய் சான்றளித்துள்ளது குறிப்பிடத்தக்கது. எனினும், நடைமுறையில் லிட்டருக்கு 60 கிமீ மைலேஜ் தரும் என எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications








