எம்வி அகஸ்ட்டாவின் புதிய எஃப்-800 சூப்பர் பைக் விபரங்கள்
இத்தாலியை சேர்ந்த எம்வி அகஸ்ட்டா நிறுவனம் புதிய சூப்பர் பைக்கின் படங்கள் மற்றும் விபரங்களை வெளியிட்டு இருக்கிறது. 2014 எஃப்-3 800 என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்த புதிய பைக்கில் எம்வி அகஸ்ட்டா புருட்டல் 800 பைக்கிலிருக்கும் அதே எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும்.
798சிசி எஞ்சினுடன் வரும் இந்த புதிய பைக் 146 எச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக இருக்கும். இந்த பைக் 173 கிலோ வெற்று எடை கொண்டதாக இருக்குமென அகஸ்டா தெரிவித்துள்ளது. இதன் டாப் ஸ்பீடு 167.1 கிமீ.
பின்புறம் அட்ஜெஸ்ட் செய்யும் வசதிகொண்ட மோனோ சஸ்பென்ஷனும், முன்புறத்தில் மார்கோஸியின் சஸ்பென்ஷனும் கொண்டிருக்கும். எஞ்சின் செட்டிங், 8 லெவல் டிராக்ஷன் கன்ட்ரோல் உள்ளிட்டவற்றை அளிக்கும் ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு வசதியளிக்கும் தொழில்நுட்பத்தை இந்த பைக்கும் கொண்டிருக்கும். 13,990 டாலர் விலையில் இந்த புதிய பைக் விற்பனைக்கு கிடைக்கும்.



















Click it and Unblock the Notifications








