ரூ.41,100 விலையில் புதிய ஹோண்டா சிடி110 ட்ரீம் பைக் விற்பனைக்கு வந்தது

By Saravana

ஹோண்டா இருசக்கர வாகன நிறுவனம் தனது மிக குறைவான விலை புதிய பைக் மாடலை இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது.

சிடி110 ட்ரீம் என்ற பெயரில் விற்பனைக்கு வந்துள்ள இந்த புதிய பைக் ட்ரீம் வரிசையில் வந்துள்ள மிக குறைவான விலை மாடலாக இருக்கும்.

Honda CD110 Dream

கவர்ச்சியான பாடி கிராஃபிக்ஸ் ஸ்டிக்கர், 6 ஸ்போக் அலாய் வீல்கள், கருப்பு நிறத்திலான சைலென்சர் மற்றும் சைலென்சர் கார்டு ஆகியவை இந்த பைக்கின் சிறப்பம்சங்களாக கூறலாம்.

இந்த பைக்கில் பொருத்தப்பட்டிருக்கும் 110சிசி எஞ்சின் 8.25 பிஎச்பி பவரை அதிகபட்சமாக வழங்கும் திறன் கொண்டது. பராமரிப்பு குறைவான பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. ஹோண்டாவின் எச்இடி தொழில்நுட்பம் கொண்ட இந்த பைக் லிட்டருக்கு 74 கிமீ மைலேஜ் தரும் என தெரிவிக்கப்படுகிறது.

கருப்பு வண்ணத்தில் சிவப்பு, நீலம் மற்றும் சாம்பல் நிறம் கொண்ட மூன்று வண்ணக் கலவைகளில் கிடைக்கும். இந்த மாத மத்தியில் உற்பத்தி துவங்கப்படுகிறது. அடுத்த மாதம் ஷோரூம்களில் கிடைக்கும்.

ட்யூப்லெஸ் டயர்கள், விஸ்காஸ் ஏர் ஃபில்டர் போன்ற சிறப்பம்சங்களை கொண்ட இந்த புதிய பைக் ரூ.41,100 டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைக்கும்.

More from DriveSpark

Article Published On: Saturday, July 5, 2014, 9:29 [IST]
English summary
Honda Motorcycle & Scooter India Pvt. Ltd. (HMSI) has launched its new Honda CD 110 Dream for the price of Rs. 41,100 (ex-showroom). The Honda CD 110 Dream will come with Honda Eco Technology (HET), it has claimed mileage of 74 kmpl.
 
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+