சர்ப்ரைஸ்... இந்தியாவில் விற்பனைக்கு வந்தது ஹோண்டா கோல்டுவிங்!

இந்தியாவில் புதிய ஹோண்டா கோல்டுவிங் டூரர் பைக் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. 40வது ஆண்டை கொண்டாடும் வேளையில் இந்த புதிய டூரர் பைக்கை இந்தியாவில் ஹோண்டா மோட்டார்சைக்கிள் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

மேலும், இந்தியாவில் 40ம் ஆண்டுக்காக வெளியிடப்பட்ட ஹோண்டா கோல்டுவிங் மாடல் விற்பனைக்கு கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய டூரர் பைக்கில் இருக்கும் சிறப்பம்சங்களை காண ஸ்லைடருக்கு வாருங்கள்.


டூரர் மாடல்

டூரர் மாடல்

நீண்ட தூர பயணங்களுக்கு ஏற்ற அம்சங்கள் நிரம்பவே பெற்றுள்ளது. சொகுசு, செயல்திறன், பொழுதுபோக்கு வசதிகள் என இந்திய வாடிக்கையாளர்களை திக்குமுக்காடச் செய்யும் வசதிகள் உள்ளன.'பிக் டாடி' என செல்லமாக அழைக்கப்படும் இந்த பைக்கின் டிசைன் பல டூரர் ரக பைக்குகளுக்கு முன்மாதிரியாக விளங்குகிறது.

எஞ்சின்

எஞ்சின்

ஹோண்டா கோல்டுவிங் பைக்கில் 87 பிஎச்பி பவரை அளிக்கும் 1832சிசி 6 சிலிண்டர் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது.

 சிறப்பம்சங்கள்

சிறப்பம்சங்கள்

க்ரூஸ் கன்ட்ரோல் சிஸ்டம், 6 ஸ்பீக்கர்களுடன் கூடிய சர்ரவுண்ட் மியூசிக் சிஸ்டம் போன்ற ஏராளமான சிறப்பு வசதிகள் உள்ளன.

ஏபிஎஸ் பிரேக்

ஏபிஎஸ் பிரேக்

இந்த பைக்கில் ஹோண்டாவின் சிபிஎஸ் மற்றும் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் கொடுக்கப்பட்டுள்ளது.

ஏர்பேக்

ஏர்பேக்

ஓட்டுபவருக்கு சிறந்த பாதுகாப்பை வழங்கும் வகையில், ஏர்பேக் கொடுக்கப்பட்டிருக்கிறது. மேலும், முதல்முறையாக ஏர்பேக்குடன் அறிமுகம் செய்யப்பட்ட மோட்டார்சைக்கிள் மாடலும் இதுதான்.

ரிவர்ஸ் கியர்

ரிவர்ஸ் கியர்

எடை அதிகம் கொண்ட பைக்கை இலகுவாக நகர்த்தவும், பார்க்கிங் செய்யவும் ஏதுவாக எலக்ட்ரிக் ரிவர்ஸ் கியர் கொடுக்கப்பட்டிருக்கிறது. மெதுவாக வண்டியை பின்நோக்கி செலுத்தும்.

விலை

விலை

பேஸ் மாடல் ரூ.28.50 லட்சத்திலும், ஏர்பேக் கொண்ட மாடல் ரூ.31.50 லட்சம் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

More from DriveSpark

Article Published On: Thursday, November 27, 2014, 16:58 [IST]
English summary
Honda Motorcycle & Scooter India Pvt. Ltd., the most trusted brand in the Indian 2wheeler industry* today introduced the much anticipated touring motorcycle- Honda Gold Wing in India. Considered as the world's best touring motorcycle, Honda Gold Wing offers the riders a unique luxurious, powerful, balanced and fully featured machine ready for every journey.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+