பெங்களூரில் சுஸுகி ஜிக்ஸெர் பைக்கின் விலை விபரம்!
பெங்களூரில் புதிய சுஸுகி ஜிக்ஸெர் பைக் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய பைக்கின் அறிமுக விழாவில் சுஸுகி நிறுவனத்தின் உயரதிகாரி அதுல் குப்தா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டர்.
150சிசி பிரிவில் மிக ஸ்டைலான தோற்றத்துடன், செயல்திறன் மிக்க எஞ்சினுடன் இந்த புதிய பைக் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த பைக்கில் சுஸுகியின் எஸ்இபி தொழில்நுட்பம் கொண்ட 155சிசி சிங்கிள் சிலிண்டர் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. 5 ஸ்பீடு கியர் பாக்ஸ் கொண்டது.

மெட்டாலிக் ஓர்ட் கிரே, கேண்டி அன்டேர்ஸ் ரெட், கிளாஸ் ஸ்பார்க்கிள் பிளாக், மெட்டாலிக் ட்ரைட்டான் புளூ, பியர்ல் மிராஜ் ஒயிட் போன்ற வண்ணங்களில் தேர்வு செய்து கொள்ளலாம். ரூ.74,552 பெங்களூர் எக்ஸ்ஷோரூம் விலையில் இந்த புதிய பைக்கை சுஸுகி மோட்டார்சைக்கிள் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது.


Click it and Unblock the Notifications








