புதிய சுஸுகி ஜிக்ஸெர் முறைப்படி விற்பனைக்கு வந்தது- விபரம்

புதிய சுஸுகி ஜிக்ஸெர் 150 பைக் இன்று விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. பெரும்பாலன விபரங்கள் முன்கூட்டியே வெளியாகிவிட்ட நிலையில், இன்று முறைப்படி சுஸுகி நிறுவனம் ஜிக்ஸெர் பைக்கை இந்திய மார்க்கெட்டில் கொண்டு வந்துள்ளது.

டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த இந்த புதிய பைக் மாடல் இளைஞர்களை கவரும் வகையிலான மாடலாக மிக ஸ்போர்ட்டியாக டிசைன் செய்யப்பட்டிருக்கிறது. அத்துடன் சில பிரத்யேக வசதிகளுடன் மிக சவாலான விலையில் வந்துள்ளது.


எஞ்சின்

எஞ்சின்

புதிய ஜிக்ஸெர் பைக்கில் 154.9சிசி எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. இந்த எஞ்சின் 14.59 எச்பி பவரையும், 14 என்எம் டார்க்கையும் அளிக்கும். 6 ஸ்பீடு கியர் பாக்ஸ் கொண்டது.

எடை

எடை

இந்த புதிய பைக் மாடல் எரிபொருள் இல்லாத நிலையில், 135 கிலோ எடை கொண்டதாக வந்துள்ளது.

வண்ணங்கள்

வண்ணங்கள்

ஓர்ட் கிரே மற்றும் டிரைட்டான் புளூ ஆகிய இரண்டு மெட்டாலிக் வண்ணங்களிலும், பியர்ல் மிராஜ் ஒயிட், கிளாஸ் ஸ்பார்க்கிள் பிளாக் மற்றும் கேண்டி ஆந்த்ராஸ் ரெட் என்ற மூன்று இதர வண்ணங்களிலும் கிடைக்கும்.

 விலை

விலை

இந்த புதிய பைக் ரூ.72,199 என்ற டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைக்கும்.

போட்டியாளர்கள்

போட்டியாளர்கள்

யமஹா எஃப்இசட், டிவிஎஸ் அப்பாச்சி, பஜாஜ் பல்சர் 150 ஆகிய பைக் மாடல்களுடன் இந்த புதிய சுஸுகி ஜிக்ஸெர் பைக் போட்டிபோடும்.

 டாப்-3 நிறுவனம்

டாப்-3 நிறுவனம்

அடுத்த மூன்று ஆண்டுகளில் இந்தியாவின் டாப்-3 நிறுவனங்களில் ஒன்றாக மாறுவதற்கான இலக்குடன் சுஸுகி புதிய தயாரிப்புகளை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், லெட்ஸ் ஸ்கூட்டருக்கு அடுத்தபடியாக இந்த புதிய பைக் மாடலை சுஸுகி விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது.

More from DriveSpark

Article Published On: Tuesday, September 9, 2014, 15:39 [IST]
English summary
Japanese Twowheeler maker Suzuki has launched new Gixxer bike at Rs 72,199 (ex-showroom Delhi). The new Gixxer bike will compete with the Yamaha FZ , Tvs Apache and Bajaj Pulsar in the premium 150 cc segment, he added. 
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+