சூப்பரான விலையில் புதிய ஸ்கூட்டி ஸெஸ்ட் விற்பனைக்கு வந்தது!
பெண் வாடிக்கையாளர்கள் மத்தியில் ஆவலை ஏற்படுத்திய புதிய டிவிஎஸ் ஸ்கூட்டி ஸெஸ்ட் ஸ்கூட்டர் இன்று விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது.
டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட்ட இந்த புதிய ஸ்கூட்டர் ஆற்றல் வாய்ந்த புதிய எஞ்சின் மற்றும் கூடுதல் சிறப்பம்சங்களுடன் ஸ்கூட்டி வரிசையில் வந்திருக்கும் இந்த புதிய ஸ்கூட்டர் வாடிக்கையாளர் வட்டத்தை விரிவுப்படுத்தும் என்று கூறலாம்.

சிறப்பம்சங்கள்
புதிய ஹெட்லைட்டுகள், பேக்லிட் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல், ட்யூப்லெஸ் டயர்கள், பார்க்கிங் பிரேக்குகல், புதிய மஃப்ளர் போன்றவை புதிய அம்சங்கள். எலக்ட்ரிக் மற்றும் கிக் ஸ்டார்ட் வசதி கொண்டது.

எஞ்சின்
டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனத்தின் பிற ஸ்கூட்டர் மாடல்களான வீகோ, ஜூபிடர் ஸ்கூட்டர் மாடல்களில் இருக்கும் அதே 110சிசி எஞ்சின்தான் இந்த ஸ்கூட்டரிலும் உள்ளது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 7.88 பிஎச்பி பவரையும்,8 என்எம் டார்க்கையும் அளிக்கும்.

மைலேஜ்
இந்த புதிய ஸ்கூட்டர் மாடல் லிட்டருக்கு 62 கிமீ மைலேஜ் தரும் என டிவிஎஸ் தெரிவித்துள்ளது.

ஸ்டோரேஜ் வசதி
இருக்கைக்கு கீழே 19 லிட்டர் கொள்ளளவு கொண்ட இடவசதி இருக்கிறது. இதன் செக்மென்ட்டில் மிகச்சிறந்த இடவசதி கொண்ட மாடலாகவும் இருக்கும். கால் வைப்பதற்கான ஃபுட் போர்டும் வசதியாக இருக்கும்.

விலை
ரூ.42,300 டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையில் இந்த புதிய டிவிஎஸ் ஸ்கூட்டி ஸெஸ்ட் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. 110சிசி செக்மென்ட்டில் முன்னிலை வகிக்கும் ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டரைவிட ரூ.8,000 குறைவான விலை கொண்ட மாடலாக வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








