ரஜினி, அஜித், விஜய் படம்கூட இப்படி ஹிட் அடிக்குமா தெரியல! தொடர்ச்சியா ஹிட் அடிக்கும் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்
பெரிய பெரிய ஹீரோக்களே ஒரு படம் ஹிட் கொடுத்தால் அடுத்த படத்தில் தோல்வியைச் சந்திப்பது என்பது வாடிக்கையானதாக மாறிவிட்டது. இந்த மாதிரியான ஓர் காலகட்டத்தில் ஓர் வெளிநாட்டு எலெக்ட்ரிக் டூ-வீலர் நிறுவனம் தொடர்ச்சியாக விற்பனை வளர்ச்சியை மட்டுமே சந்தித்துக் கொண்டிருப்பதாக ஆச்சரியமளிக்கும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஓலா எலெக்ட்ரிக் (Ola Electric) நிறுவனமே தற்போது விற்பனையில் புதிய உச்சத்தை எட்டி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதாவது, இதுவரை இல்லாத அளவு அதிக எண்ணிக்கையில் ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விற்பனையாகி இருக்கின்றன. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு இந்தியாவில் மிக சிறப்பான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருப்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. ஆனால், சென்ற மார்ச் மாதத்தில் அந்த நிறுவனத்திற்குக் கிடைத்திருக்கும் விற்பனை வரவேற்பு என்பது இதுவரை எந்தவொரு எலெக்ட்ரிக் டூ-வீலர் உற்பத்தி நிறுவனமும் பெற்றிராதது என்பது குறிப்பிடத்தகுந்தது.
அந்த அளவிற்கே மிக சிறப்பான விற்பனை எண்ணிக்கையை ஓலா எலெக்ட்ரிக் 2024 மார்ச் மாதத்தில் பெற்றிருக்கின்றது. சுமார் 53 ஆயிரத்திற்கும் அதிகமான ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களே நாட்டில் விற்பனையாகி இருக்கின்றன. ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் அதிக சிறப்பு வசதிகளைத் தாங்கியவை என்பதாலேயே இந்தியாவில் அதற்கு மிக சிறப்பான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது.
இதுதவிர நிறுவனம் சென்ற மார்ச் மாதத்தில் சிறப்பு சலுகைகள் அறிவித்து இருந்தது. அதுவும், நிறுவனத்தின் மின்சார ஸ்கூட்டர்கள் மிக அதிக எண்ணிக்கையில் போன மாதம் விற்பனையாக காரணமாக அமைந்திருக்கின்றது. ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் சென்ற மார்ச் மாதத்தில் 25 ஆயிரம் ரூபாய் வரை விலை தள்ளுபடியை அறிவித்து இருந்தது.
குறிப்பாக, மகளிர் தினத்தை முன்னிட்டு மூன்று நாட்களுக்கு பெண்களுக்கு ரூ. 27 ஆயிரம் வரை சலுகையை அறிவித்து இருந்தது. இதுமாதிரியான திட்டங்களினாலேயே ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் இதுவரை இல்லாத அளவில் போன மாதம் அதிக விற்பனையைப் பெற்றிருக்கின்றது. இதேபோல், ஆண்டுடன் ஆண்டு விற்பனையை ஒப்பிடுகையிலும் மாபெரும் வளர்ச்சியை சென்ற நிதியாண்டில் ஓலா எலெக்ட்ரிக் பெற்றிருக்கின்றது.
2022-2023 நிதியாண்டில் 1,52,741 யூனிட்டுகள் மட்டுமே ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விற்பனையாகிய நிலையில், 2023-2024ஆம் நிதியாண்டில் 328,785 யூனிட்டுகள் வரை விற்பனையாகி இருக்கின்றன. இது 115 சதவீதம் அதிக விற்பனை வளர்ச்சியாகும். இதேபோல், காலாண்டு -டூ- காலாண்டு விற்பனை விகிதமும் மாபெரும் விற்பனை வளர்ச்சியையேச் சந்தித்து இருக்கின்றது.
84,133 யூனிட்டுகள் மட்டுமே முந்தைய நிதியாண்டின் காலாண்டில் விற்பனையாகிய நிலையில், தற்போது நடந்து முடிந்த 2023-24 நிதியாண்டில் அது 119,310 யூனிட்டுகளாக வளர்ச்சியடைந்திருக்கின்றது. இது உண்மையில் மாபெரும் விற்பனை வளர்ச்சியாகும். ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் தயாரிப்புகளின்மீது சர்ச்சையான கருத்துகள் பரவி வரும் நிலையிலும் இந்த அளவு மாபெரும் விற்பனை வளர்ச்சியை அது சந்தித்து இருப்பது உண்மையில் அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருக்கின்றது.
இப்போதைய நிலவரப்படி ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் எஸ்1 ப்ரோ (S1 Pro), எஸ்1 ஏர் (S1 Air) மற்றும் எஸ்1எக்ஸ் பிளஸ் (S1 X+) ஆகிய மாடல்களிலேயே விற்பனைக்குக் கிடைக்கின்றது. இதில், எஸ்1எக்ஸ் பிளஸ்ஸே ஆரம்ப மலிவு விலை ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஆகும்.
இது, எஸ்1எக்ஸ் 2 kWh (S1 X 2 kWh), எஸ்1 எக்ஸ் 3 kWh (S1 X 3kWh), எஸ்1எக்ஸ் 4 kWh (S1 X 4kWh) மற்றும் எஸ்1எக்ஸ் பிளஸ் 3 kWh (S1X + 3 kWh) பல தரப்பட்ட தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. ரூ. 84,999 என்கிற ஆரம்ப விலையில் இருந்து இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்குக் கிடைக்கின்றது.
சலுகையாக அறிவிக்கப்பட்ட விலை இதுவாகும். இப்போதும் இதே விலையே நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைதள பக்கத்தில் காண்பிக்கின்றது. எனவே விலைகள் இன்னும் மாற்றப்படவில்லை என்றே தெரிகின்றது. விரைவில் இதன் விலை அதிகரிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால், இதுபற்றிய எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு மிக சிறப்பான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இது உறுதிப்படுத்தும் விதமாக ஒவ்வொரு மாதத்தின் சேல்ஸ் ரிப்போர்ட்டும் அமைந்துக் கொண்டிருக்கின்றது. சென்ற பிப்ரவரி மாதத்தில்கூட நிறுவனம் 40 சதவீதத்திற்கும் அதிகமான விற்பனை வளர்ச்சியைப் பெற்றிருந்தது குறிப்பிடத்தகுந்தது.


Click it and Unblock the Notifications








