ஆச்சர்யம்... வெஸ்பா ஸ்கூட்டரை ரூ.47,912க்கு விற்கும் டீலர்!

மும்பையை சேர்ந்த பியாஜியோ டீலர் ஒருவர் வெஸ்பா ஸ்கூட்டரை ரூ.47,912 விலையில் விற்பனை செய்வதாக விளம்பரம் கொடுத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

ரூ.66,660 விலையில் கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட வெஸ்பா ஸ்கூட்டருக்கு பிரிமியம் ஸ்கூட்டர் செக்மென்ட்டில் நிலைநிறுத்தப்பட்டது. பிரத்யேகத்தை விரும்பும் வாடிக்கையாளர்களின் முதல் தேர்வாகவும் வெஸ்பா எல்எக்ஸ்125 ஸ்கூட்டர் மாறியிருக்கிறது.

Vespa LX 125

இந்த நிலையில், விற்பனையை அதிகரிக்கும் விதமாக வெஸ்பா ஸ்கூட்டரின் விலையை ரூ.6,660ஐ பியாஜியோ குறைத்தது. தற்போது ரூ.59,990 விலையில் வெஸ்பா எல்எக்ஸ் 125 ஸ்கூட்டர் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், மும்பையை சேர்ந்த வெஸ்பா ஸ்கூட்டர் டீலரான அஸெட் வெஸ்பா நிறுவனம் வெஸ்பா ஸ்கூட்டருக்கு ரூ.12,000 வரை அதிரடி தள்ளுபடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ரூ.47,912 விலையில் வெஸ்பா ஸ்கூட்டரை வாங்கிக் கொள்ளலாம் என அறிவித்துள்ளது.

செய்தித்தாளில் நேற்று இந்த விளம்பரம் வெளியிடப்பட்டது. நேற்றுமுதல் 4 நாட்களுக்கு மட்டுமே இந்த ஆஃபர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

More from DriveSpark

Article Published On: Wednesday, March 20, 2013, 12:42 [IST]
English summary
Asset Vespa - a Mumbai based Piaggio India dealer is selling the Vespa LX125 scooter at an attractive price of 47,912 rupees. Check this advertisement. Recently Piaggio has slashed the prices for its premium lifestyle scooter.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+