புதிய வெஸ்பா எஸ் ஸ்கூட்டர் விற்பனைக்கு வந்தது - ! இதுவும் பிரிமியம் மாடல்தான்!!
மும்பையில் நடந்த நிகழ்ச்சியில் புதிய வெஸ்பா எஸ் ஸ்கூட்டர் சற்றுமுன் விற்பனைக்காக அறிமுகம் செய்யப்பட்டது. நாடு முழுவதும் உள்ள வெஸ்பா ஷோரூம்களில் இந்த புதிய ஸ்கூட்டர் ஏற்கனவே விற்பனைக்கு வந்துவிட்ட நிலையில், சம்பிரதாயத்துக்காக இன்று அறிமுக விழா நடந்தது.
பாலிவுட் நடிகர் இம்ரான்கான் இந்த புதிய ஸ்கூட்டரை அறிமுகம் செய்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பேசிய பியாஜியோ நிறுவனத்தின் தலைவர் ரவி சோப்ரா கூறுகையில்," இளைய சமுதாயத்தினருக்கான புதிய மாடலாக வெஸ்பா எஸ் ஸ்கூட்டரை பெரு மகிழ்ச்சியுடன் விற்பனைக்கு விட்டுள்ளோம்.
இரு ஆண்டுகளுக்கு முன்னர் வெஸ்பா எல்எக்ஸ்125 மூலம் மார்க்கெட்டில் நாங்கள் உருவாக்கிய பிரிமியம் ஸ்கூட்டர் மார்க்கெட்டில் மூன்றாவது மாடலாக இந்த ஸ்கூட்டரை களமிறக்கியுள்ளோம். இதன் டிசைன் நிச்சயம் பெரிதும் கவரும் என்பதோடு, வெஸ்பா பிராண்டுக்கு ஒரு திருப்புமுனை மாடலாக அமையும்," என்று கூறினார்.

விலை விபரம்
மும்பையில் ரூ.76,495 விலையிலும், டெல்லியில் ரூ.75,424 எக்ஸ்ஷோரூம் விலையிலும் இந்த புதிய ஸ்கூட்டர் விற்பனைக்கு விடப்பட்டுள்ளது. வெஸ்பா விஎக்ஸ் ஸ்கூட்டர் மாடலைவிட இந்த புதிய ஸ்கூட்டர் மாடல் ரூ.4,500 கூடுதல் விலை கொண்டதாக வந்துள்ளது.

எஞ்சின்
வெஸ்பா விஎக்ஸ் ஸ்கூட்டரில் பயன்படுத்தப்பட்டிருக்கும் அதே 125சிசி எஞ்சின்தான் இந்த ஸ்கூட்டரில் பொருத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்சின் 10.6 பிஎஸ் பவரையும், 10.6 என்எம் டார்க்கையும் அளிக்கும்.

டிஸ்க் பிரேக்
முன்சக்கரத்தில் டிஸ்க் பிரேக் அமைப்பும், பின்புறத்தில் டிரம் பிரேக் அமைப்பும் கொடுக்கப்பட்டுள்ளது.

வண்ணங்கள்
ஆரஞ்ச், சிவப்பு, கருப்பு மற்றும் வெள்ளை ஆகிய 4 வண்ணங்களில் இந்த புதிய ஸ்கூட்டர் மாடல் விற்பனைக்கு வந்துள்ளது.

ட்யூப்லெஸ் டயர்
3 ஸ்போக் அலாய் வீல்கள், ட்யூப்லெஸ் டயர்கள் பொருத்தப்பட்டுள்ளன. இன்னும் பல்வேறு சிறப்பம்சங்களுடன் இந்த புதிய பிரிமியம் ஸ்கூட்டர் வந்துள்ளது.


Click it and Unblock the Notifications








