புதிய புல்லட்டின் விலையை அறிவித்த ராயல் என்பீல்டு
புதிய புல்லட்டை முறைப்படி விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது ராயல் என்பீல்டு நிறுவனம். வெளிப்புற வடிவமைப்பில் சிறிது மாறுதல்கள் புதிய வண்ணத்தில் புதிய புல்லட்டின் விபரங்களை ராயல் என்பீல்டு சமீபத்தில் வெளியிட்டது.
ஆனால், விலையை மட்டும் அறிவிக்கவில்லை. இந்த நிலையில், புதிய புல்லட் 500 மோட்டார்சைக்கிளின் விலையை இன்று அறிவித்துள்ளது ராயல் என்பீல்டு. ரூ.1.53,855 டெல்லி ஆன்ரோடு விலையில் புதிய புல்லட் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருக்கிறது.

புதிய புல்லட் 500 மோட்டார்சைக்கிளில் 26.1 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 499 சிசி யூனிட் கன்ஸ்ட்ரக்ஷன் எஞ்சின்(USE) பொருத்தப்பட்டிருக்கிறது. ஃபாரஸ்ட் கிரீன் வண்ணத்தில் மட்டும் கிடைக்கும்.


Click it and Unblock the Notifications








