ராயல் என்பீல்டு கஃபே ரேஸர் சோதனை - கூடுதல் தகவல்கள்!
அடுத்ததாக கஃபே ரேஸர் மோட்டார்சைக்கிளை அறிமுகப்படுத்த இருப்பதாக ராயல் என்பீல்டு சமீபத்தில் தெரிவித்தது. கடந்த ஆண்டு டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் வைக்கப்பட்டிருந்த இந்த மோட்டார்சைக்கிளை உலகின் பிற பகுதிகளில் நடைபெறும் ஆட்டோ கண்காட்சிகளில் பார்வைக்கு வைத்து வருகிறது ராயல் என்பீல்டு.
இந்த நிலையில், நம் நாட்டில் முதன்முறையாக சோதனை ஓட்டத்தின்போது கஃபே ரேஸர் கேமரா கண்ணில் சிக்கியுள்ளது. பெங்களூரில் சோதனை செய்யப்பட்ட கஃபே ரேஸர் மோட்டார்சைக்கிளை ஆட்டோகார் இந்தியாவின் வாசகர் ஒருவர் படம் பிடித்துள்ளார். இந்த ஆண்டு இறுதியில் விற்பனைக்கு வர இருக்கும் இந்த புதிய மோட்டார்சைக்கிள் குறித்த சில கூடுதல் விபரங்களை ஸ்லைடரில் காணலாம்.

கான்டினென்டல் ஜிடி கஃபே ரேஸர்
ஃபே ரேஸர் ரகத்தை இந்த மோட்டார்சைக்கிளுக்கு கான்டினென்டல் ஜிடி என்று பெயரிடப்பட உள்ளது.

மட்கார்டு டிசைன்
சோதனை செய்யப்பட்ட மோட்டார்சைக்கிளில் முன்பக்க மட்கார்டு குறைந்த நீளம் கொண்டதாக இருக்கிறது.

பெட்ரோல் டேங்க்
மோட்டார்சைக்கிளுக்கு மிக எடுப்பாக இருக்கும் வகையில் பெட்ரோல் டேங்க் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஸ்போக் ரிம்
ஸ்போக்ஸ்களுடன் கூடிய ரிம் பொருத்தப்பட்டிருக்கிறது. ஹேண்டில்பாரும் கவரும் வகையிலும், கச்சிதமாகவும் இருக்கிறது.

இருக்கை
ஆட்டோ கண்காட்சிகளில் வைக்கப்பட்டிருந்த மாடலில் ஒருவர் மட்டுமே அமர்ந்து செல்லும் வகையில் இருந்தது. ஆனால், சோதனை செய்யப்பட்ட மோட்டார்சைக்கிளில் இருவர் அமர்ந்து பயணம் செய்யும் வகையில் இருக்கிறது.

எஞ்சின்
இந்த மோட்டார்சைக்கிளில் 535 சிசி திறன் கொண்ட ஏர்கூல்டு எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும்.

ஃபிரேம்
உறுதிமிக்க டியூபியூலர் ஸ்டீல் கன்ஸ்ட்ரக்டடு ஃபிரேமில் கட்டமைக்கப்பட்டுள்ளது.

சஸ்பென்ஷன்
முன்புறத்தில் டெலிஸ்கோப்பிக் சஸ்பென்ஷனும், பின்புறத்தில் கேஸ் சார்ஜ்டு ஷாக் அப்சார்பரும் பொருத்தப்பட்டிருக்கும்.

பிரேக்
முன்புறம் மற்றும் பின்புறத்தில் சிங்கிள் டிஸக் கொண்ட பிரேக்குகள் பொருத்தப்பட்டிருக்கும்.

விலை
ரூ.2 லட்சம் விலையில் வர இருக்கும் இந்த புதிய கான்டினென்டல் ஜிடி கஃபே ரேஸர் மோட்டார்சைக்கிளின் உற்பத்தி நிலை மாடலில் வித்தியாசங்கள் இருக்க வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.


Click it and Unblock the Notifications








