இங்கிலாந்தில் விற்பனைக்கு வந்தது ராயல் என்ஃபீல்டு ஜிடி!!
இங்கிலாந்தில் ராயல் என்ஃபீல்டு கான்டினென்டல் ஜிடி மோட்டார்சைக்கிள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. கஃபே ரேஸர் ரகத்தில் டிசைன் செய்யப்பட்டிருக்கும் இந்த மோட்டார்சைக்கிள் ராயல் என்ஃபீல்டின் பிற மோட்டார்சைக்கிள் மாடல்களிலிருந்து முற்றிலும் வேறுபட்ட அம்சங்களை கொண்டது.
கடந்த 60 ஆண்டுகால ராயல் என்ஃபீல்டு வரலாற்றில் முதல் கஃபே ரேஸர் மாடல் இது என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும், சென்னை, ஒரகடம் ஆலையில் உற்பத்தி செய்யப்படும் இந்த மோட்டார்சைக்கிள் முதலாவதாக இங்கிலாந்தில் விற்பனைக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. கூடுதல் விபரங்களை ஸ்லைடரில் காணலாம்.

டிசைன்
1960ம் ஆண்டு கஃபே ரேஸர் மோட்டார்சைக்கிள் மாடலை மனதில் வைத்து இந்த பைக்கை டிசைன் செய்துள்ளதாக ராயல் எனஃபீல்டு தெரிவித்துள்ளது. நீளமான பெட்ரோல் டேங்க், குட்டையான இருக்கை, ஹேண்டில்பார் என அனைத்திலும் வித்தியாசத்தை காண முடியும்.

எஞ்சின்
ராயல் என்ஃபீல்டு கான்டினென்டல் ஜிடி மோட்டார்சைக்கிளில் 535 சிசி எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. இந்த எஞ்சின் 29.1 பிஎஸ் பவரையும், 44 என்எம் டார்க்கையும் அளிக்கும். 5 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் இணைந்து செயல்புரியும்.

எடை
இந்த மோட்டார்சைக்கிள் 184 கிலோ கெர்ப் எடை கொண்டது. 13.5 லிட்டர் கொள்ளளவு கொண்ட பெட்ரோல் டேங்க் பொருத்தப்பட்டிருக்கிறது.

டிஸ்க் பிரேக்
பிரெம்போ டிஸ்க் பிரேக்குகள் பொருத்தப்பட்டு உள்ளன. 41 மிமீ போர்க்குகள் கொண்ட முன்புற சஸ்பென்ஷனும், பின்புறத்தில் பயோலி ட்வின் சார்ஜ்டு கேஸ் ஷாக் அப்சார்களும் கொடுக்கப்பட்டுள்ளன.

விஷேச உடுப்பு
இந்த மோட்டார்சைக்கிளுடன் விசேஷ ரைடர் ஜாக்கெட், பேண்ட், ஷூ மற்றும் கையுறைகள் அடங்கிய கிட்டையும் ராயல் என்ஃபீல்டு வழங்குகிறது.

விலை
இந்திய மதிப்பில் ரூ.5.2 லட்சம் மதிப்பில் ராயல் என்ஃபீல்டு கான்டினென்டல் ஜிடி அங்கு விற்பனைக்கு வந்துள்ளது.

இந்தியாவில்...??
அடுத்த மாதம் இந்த புதிய மோட்டார்சைக்கிள் இந்தியாவில் விற்பனைக்கு வர உள்ளது.


Click it and Unblock the Notifications








