ரூ.2 லட்சத்தில் விற்பனைக்கு வந்தது ராயல் என்ஃபீல்டு ஜிடி!!
கோவாவில் நடந்த நிகழ்ச்சியில் ராயல் என்ஃபீல்டு கான்டினென்டல் ஜிடி மோட்டார்சைக்கிள் முறைப்படி விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. ராயல் என்ஃபீல்டின் புல்லட், கிளாசிக், தண்டர்போர்டு வரிசையில் 4வது மாடலாக கான்டினென்டல் ஜிடி மோட்டார்சைக்கிளும் இணைந்தது.
1960களில் இங்கிலாந்தை கலக்கிய ராயல் என்ஃபீல்டின் கஃபே ரேஸர் மோட்டார்சைக்கிளின் அடிப்படையாகக் கொண்டு இந்த மோட்டார்சைக்கிள் டிசைன் செய்யப்பட்டுள்ளது. மஞ்சள் மற்றும் சிவப்பு ஆகிய இரண்டு நிறங்களில் விற்பனைக்கு வந்திருக்கும் இந்த புதிய மோட்டார்சைக்கிளின் பிரத்யேக படங்கள் மற்றும் கூடுதல் விபரங்களை டிரைவ்ஸ்பார்க் தளம் வாசகர்களுக்கு வழங்குகிறது.

எஞ்சின்
ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள்களிலேயே அதிக சக்திவாய்ந்த எஞ்சின் பொருத்தப்பட்ட மோட்டார்சைக்கிள் இதுதான். 5,100 ஆர்பிஎம்.மில் 29.1 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 535 சிசி எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. 44 என்எம் டார்க்கையும் அளிக்கும்.

கியர் பாக்ஸ்
இந்த மோட்டார்சைக்கிளில் 5 ஸ்பீடு கியர் பாக்ஸ்பொருத்தப்பட்டுள்ளது.

ஃப்ரேம் சிறப்பு
இங்கிலாந்தை சேர்ந்த ஹாரிஸ் எஞ்சினியரிங் நிறுவனம் இந்த மோட்டார்சைக்கிளுக்கான ஃப்ரேமை தயாரித்து கொடுத்துள்ளது. இந்த ஃப்ரேம் மிகச்சிறப்பான கையாளுமையை மோட்டார்சைக்கிளுக்கு கொடுக்கும்.

சஸ்பென்ஷன்
இதற்கான பின்புற சஸ்பென்ஷனை இத்தாலியை சேர்ந்த பயோலி நிறுவனம் தயாரித்து கொடுத்துள்ளது. இதில், எடைக்கு தக்கவாறு அட்ஜெஸ்ட் செய்யும் வசதி கொண்டது.

டயர்
இந்த மோட்டார்சைக்கிளில் பைரெல்லி டயர்கள் பொருத்தப்பட்டுள்ளன.

பிரேம்போ பிரேக்
இந்த மோட்டார்சைக்கிளில் பிரெம்போ பிரேக் அமைப்பு பயன்படுத்தப்பட்டுள்ளது. முன்புறத்தில் 2 பிஸ்டன் காலிபர் கொண்ட 300மிமீ டிஸ்க் பிரேக்கும், பின்புறத்தில் சிங்கிள் பிஸ்டன் காலிபர் கொண்ட 240மிமீ டிஸ்க் பிரேக்கும் பயன்படுத்தப்பட்டுள்ளது.

வடிவம்
வீல்பேஸ்: 1360மிமீ
கிரவுண்ட் கிளியரன்ஸ்: 140மிமீ
நீளம்: 2060 மிமீ
அகலம்: 760மிமீ
உயரம்: 1070மிமீ
இருக்கை உயரம்: 800மிமீ

இலகு எடை
இந்த மோட்டார்சைக்கிள் இதன் ரகத்தில் இலகு எடை கொண்டதாக குறிப்பிடப்படுகிறது. 13.5 லிட்டர் பெட்ரோல் மற்றும் ஆயிலையும் சேர்த்து 184 கிலோ எடை கொண்டதாக இருக்கும்.

விலை
டெல்லியில் ரூ.2.05 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையிலும், மும்பையில் ரூ.2.14 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையிலும் விற்பனைக்கு கிடைக்கும்.

உற்பத்தி
சென்னை ஒரகடத்தில் அமைந்துள்ள புதிய ராயல் என்ஃபீல்டு தொழிற்சாலையில் இந்த மோட்டார்சைக்கிள் உற்பத்தி செய்யப்படுகிறது.

டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்
ராயல் என்ஃபீல்டு கான்டினென்டல் ஜிடி மோட்டார்சைக்கிளின் டெஸ்ட் டிரைவ் மற்றும் கூடுதல் விபரங்களை விரைவில் வழங்குகிறோம்.


Click it and Unblock the Notifications








