250சிசி புல்லட்டை வடிவமைக்கும் ராயல் என்ஃபீல்டு!
"250சிசி மோட்டார்சைக்கிள்களால் ஏற்பட்டுள்ள நெருக்கடியை சமாளிக்கும் விதமாக புதிய 250சிசி புல்லட்டை ராயல் என்ஃபீல்டு வடிவமைத்து வருவதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.
கவாஸாகி நின்ஜா 250ஆர், ஹோண்டா சிபிஆர் 250ஆர் உள்ளிட்ட பைக்குகளால் 350சிசி புல்லட் மற்றும் தண்டர்பேர்டு விற்பனையில் பாதிப்பு ஏற்படுத்துவதாக கூறப்படுகிறது. இதையடுத்து, புதிய 250சிசி புல்லட்டை ராயல் என்ஃபீல்டு வடிவமைத்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த புதிய புல்லட் ஜப்பானிய தயாரிப்புகளை ஒரு கை பார்க்கும் விலையில் வர இருப்பதாகவும் அந்த தகவல்கள் கூறுகின்றன. 250சிசி முதல் 1250சிசி வரையில் டிவின் ஸ்பார்க் எஞ்சினுக்கு ராயல் என்ஃபீல்டு காப்புரிமை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, அடுத்ததாக கஃபே ரேஸர் 535 மோட்டார்சைக்கிளை அறிமுகப்படுத்த இருப்பதாக ராயல் என்ஃபீல்டு தெரிவித்துள்ளது. இந்த பைக் கிளாசிக் 500 மற்றும் தண்டர்பேர்டு 500 பைக்குகளை காட்டிலும் அதிக பவர் கொண்டதாக இருக்கும்.
இதன் சஸ்பென்ஷனும் மிகச் சிறப்பாக இருக்கும் என்று அந்த நிறுவன வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ரூ.2 லட்சத்தில் இந்த புதிய பைக் விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








