புதிய புல்லட்டை அறிமுகம் செய்யும் ராயல் என்பீல்டு: டீசரை வெளியிட்டது
புதிய புல்லட் 500 மோட்டார்சைக்கிளின் டீசர் படத்தை ராயல் என்பீல்டு வெளியிட்டிருக்கிறது. இந்த புதிய புல்லட் விரைவில் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என தெரிகிறது.
கிட்டதட்ட 10 ஆண்டுகளுக்கு பின்னர் ஸ்டான்டர்டு மாடல் புல்லட்டை ராயல் என்பீல்டு மீண்டும் அறிமுகப்படுத்த உள்ளது. புதிய புல்லட் மோட்டார்சைக்கிள் ஃபாரஸ்ட் கிரீன் என்ற பச்சை வண்ணத்தில் வருகிறது.

தற்போது கிளாசிக் 500, குரோம் மற்றும் டெசர்ட் ஸ்ட்ரோம் மோட்டார்சைகக்கிள்களில் பொருத்தப்பட்டிருக்கும் ஏவிஎல் 500 எஞ்சினுடன் புதிய புல்லட் வருகிறது.
இந்த எஞ்சின் 27 பிஎச்பி ஆற்றலையும், 41.3 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்துவதாக இருக்கும். தோற்றத்தை பொறுத்தவரை அப்படியே பழைய மாடலை ஒத்தே இருக்கும். இந்த புதிய மோட்டார்சைக்கிள் புல்லட் பிரியர்களுக்கு தேனினும் இனிய செய்தியாக இருக்கிறது.


Click it and Unblock the Notifications








