ராஜீவ் பஜாஜிடம் பிடிவாதம் பிடித்து கேடிஎம் பைக் வாங்கிய ஷாரூக்கான்!
புனேயில், கேடிஎம் டியூக் 390 பைக்கை வாடிக்கையாளர்களுக்கு டெலிவிரி கொடுக்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில், நடிகர் ஷாரூக்கான் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
கேடிஎம் டியூக் 390 பைக்கை முன்பதிவு செய்த முதல் 5 வாடிக்கையாளர்களுக்கு ஷாரூக்கான் தனது ஆட்டோகிராஃப் போடப்பட்ட சாவியை வழங்கினார்.
மேலும், அவர்களுடன் சேர்ந்து ஆடிப் பாடி பரவசப்படுத்தினார். இதைத்தொடர்ந்து, அவர் பிடிவாதம் பிடித்து வாங்கிய முதல் பைக்கான கேடிஎம் டியூக் 200 சிலாகித்து பேசினார்.

கனவு பைக்
கேடிஎம் டியூக் 200 அறிமுகம் செய்யப்பட்ட போதே அந்த பைக்கை வாங்குவதற்கு ஆவல் பிறந்ததாக ஷாரூக் குறிப்பிட்டார்.

விருப்பம்
ஓர் ஆண்டுக்கு முன் கோல்கட்டா நைட் ரைடர்ஸ் அணியின் லோகோ வெளியீட்டு விழாவில் தனது நெருங்கிய நண்பரான பஜாஜ் ஆட்டோ நிர்வாக இயக்குனர் ராஜீவ் பஜாஜிடம் தனது விருப்பத்தை ஷாரூக் தெரிவித்துள்ளார்.

மனைவி தடா
இதற்கு பின்னர் பதிலளித்து பேசிய ராஜீவ் பஜாஜ் கூறுகையில், "ஷாரூக்கானுக்கு முதுகுவலி பிரச்னை இருப்பதால் பைக்கை தர வேண்டாம் என்று அவரது மனைவி கவுரி முட்டுக் கட்டை போட்டுவிட்டாராம்.

சாதித்த ஷாரூக்
ஆனால், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ராஜீவை ரகசியமாக தொடர்பு கொண்டு தனது அடக்க முடியாத ஆவலை வெளிப்படுத்தியுள்ளார். வேறுவழியில்லாமல், டியூக் 200 பைக்கை ஷாரூக்கிற்காக கஸ்டமைஸ் செய்து கொடுத்துள்ளனர்.

கனவு நனவானது
இதுகுறித்து ஷாரூக்கான் குறிப்பிடுகையில், எனது நீண்ட நாள் கனவு இந்த கேடிஎம் டியூக் பைக் மூலம் நனவாகியதாக நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார். மேலும், பைக்கை கஸ்டமைஸ் செய்து கொடுத்த சகன் ஆலை தொழிலாளர்களுக்கும் தனது பாராட்டை தெரிவித்தார். ஷாரூக்கான் கேடிஎம் டியூக் 200 பைக்கில் அவரது இன்ஷியல்கள் பொறித்து தரப்பட்டுள்ளது.

டெலிவிரி வழங்கும் ஷாரூக்
கேடிஎம் டியூக் 390 பைக்கை டெலிவிரி வழங்கும் ஷாரூக்கான்.

ஷாரூக் கையால் பைக்
கேடிஎம் டியூக் 390 பைக்கை டெலிவிரி வழங்கும் ஷாரூக்கான்.

ஷாரூக் கையால் பைக்
கேடிஎம் டியூக் 390 பைக்கை டெலிவிரி வழங்கும் ஷாரூக்.

ஷாரூக் கையால் பைக்
கேடிஎம் டியூக் 390 பைக்கை டெலிவிரி வழங்கும் ஷாரூக்.

இங்கேயுமா...
அதிர்ஷ்டசாலி வாடிக்கையாளர்களுடன் இணைந்து ஓர் ஆட்டம் போட்ட ஷாரூக்கான்.


Click it and Unblock the Notifications








