அறக்கட்டளை நிதிக்காக ஸ்பெஷல் சுஸுகி ஆக்செஸ் அறிமுகம்

பிரபல நடிகர் சல்மான்கான் நடத்தும் அறக்கட்டளைக்கு நிதி திரட்டும் வகையில், புதிய ஸ்பெஷல் எடிசன் சுஸுகி ஆக்செஸ் ஸ்கூட்டர் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. சுஸுகி நிறுவனத்துக்கும், பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கும் நெருங்கிய பந்தம் இருந்து வருகிறது. அவர் சுஸுகியின் பவர்ஃபுல் பைக்குகளை மிகவும் விரும்பி வாங்குகிறார். மேலும், அந்த நிறுவனத்தின் விளம்பர தூதராகவும் இருந்து வருகிறார்.

இந்தநிலையில், இந்த பந்தத்தை மேலும் உறுதியாக்கும் விதத்தில் சல்மான் கான் அறக்கட்டளைக்கு நிதி திரட்ட ஸ்பெஷல் எடிசன் ஆக்செஸ் ஸ்கூட்டரை சுஸுகி அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்கூட்டர் மூலம் கிடைக்கும் குறிப்பிட்ட தொகை அறக்கட்டளை வழியாக பல்வேறு இலவச மருத்துவ சிகிச்சைகளுக்கு பயன்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய ஸ்கூட்டரில் இருக்கும் கூடுதல் அம்சங்கள் மற்றும் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

விலை விபரம்

விலை விபரம்

ரூ.54,375 டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையில் வந்துள்ளது ஸ்பெஷல் எடிசன் ஆக்செஸ். சாதாரண மாடலைவிட இது ரூ.1,000 கூடுதலாகும். இந்த தொகைதான் சல்மான்கான் அறக்கட்டளைக்கு வழங்கப்படும் என்று சுஸுகி தெரிவித்துள்ளது. கண் புரை மற்றும் இருதய அறுவை சிகிச்சைகளுக்கு இந்த நிதி பயன்படுத்தப்படும்.

நல நிதி இலக்கு

நல நிதி இலக்கு

மொத்தம் 40,000 ஸ்கூட்டர்களை விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக ரூ.3 கோடி வரை நிதி திரட்டி வழங்க சுஸுகி இலக்கு வைத்துள்ளது.

ஸ்பெஷல் ஸ்டிக்கர்

ஸ்பெஷல் ஸ்டிக்கர்

முன்புறத்தில் சல்மான் கான் நடத்தும் "Being Human Foundation" அறக்கட்டளையின் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளது.

 புதிய கிராப் ரெயில்

புதிய கிராப் ரெயில்

குரோம் பூச்சு கொண்ட கிராப் ரெயில் பொருத்தப்பட்டிருக்கும்.

சீட் கவர்

சீட் கவர்

மென்மையும், கவர்ச்சியையும் தரும் டேன் லெதர் சீட் கவர் போடப்பட்டுள்ளது.

ஸ்பெஷல் எடிசன்

ஸ்பெஷல் எடிசன்

பக்கவாட்டில் ஸ்பெஷல் எடிசனை குறிக்கும் "Apna Way of Life" என்ற ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருக்கிறது.

குரோம் விங் மிரர்

குரோம் விங் மிரர்

சாதாரண கண்ணாடிகளுக்கு பதில் குரோம் பூச்சுடன் கூடிய ரியர் வியூ கண்ணாடிகள் பொருத்தப்பட்டிருக்கிறது.

எஞ்சின்

எஞ்சின்

சுஸுகி ஆக்செஸ் ஸ்கூட்டரில் 8.58 எச்பி ஆற்றலையும், 9.8 என்எம் டார்க்கையும் அளிக்கும் 124சிசி எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது.

More from DriveSpark

Article Published On: Thursday, October 3, 2013, 17:39 [IST]
English summary
In, what is a sort of role reversal, Suzuki two wheelers India has associated itself with brand ambassador Salman Khan's Being Human foundation. As part of the the team up the Japanese company has launched a special edition Access 125 ‘Being Human' edition automatic scooter.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+