ரூ.16.45 லட்சத்தில் ஸ்பெஷல் எடிசன் சுஸுகி இன்ட்ரூடர் அறிமுகம்
ரூ.16.45 லட்சத்தில் ஸ்பெஷல் எடிசன் சுஸுகி இன்ட்ரூடர் க்ரூஸர் பைக் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
B.O.O.S எடிசன் என்ற பெயரில் வந்திருக்கும் இந்த புதிய மாடல் தோற்றத்தில் கூடுதல் கவர்ச்சியை கொண்டதாக இருக்கிறது.

மேட் பினிஷ்
எஞ்சின், புகைப்போக்கி, சக்கரங்கள், முன்புர போர்க்குகள், கைப்பிடி ஆகிய அனைத்தும் கருப்பு வண்ணத்தில் மேட் பினிஷ் செய்யப்பட்டுள்ளது. சாதாரண இன்ட்ரூடர் எம்1800ஆர் பைக்கில் இருக்கும் குரோம் பூச்சுகள் இதில் இல்லை.

மஞ்சள் அலங்காரம்
பெட்ரோல் டேங்க், ஃபென்டர்கள், ஹெட்லைட் மற்றும் வீல்களில் மஞ்சள் வண்ண ஸ்டிக்கருடன் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.

எஞ்சின்
எஞ்சினில் மாற்றங்கள் ஏதும் இல்லை. சாதாரண மாடலில் பொருத்தப்பட்டிருக்கும் அதே 1,783சிசி வி ட்வின் எஞ்சின்தான் இதிலும் பொருத்தப்பட்டிருக்கிறது. 5 ஸ்பீடு டிரான்ஸ்மிஷன் கொண்ட இந்த பைக் 347 கிலோ எடை கொண்டது. இந்க க்ரூஸர் பைக் 19.5 லிட்டர் பெட்ரோல் டேங்க் கொண்டது.

விலை
ரூ.16.45 லட்சம் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையில் இந்த ஸ்பெஷல் சுஸுகி இன்ட்ரூடர் விற்பனைக்கு கிடைக்கும். சாதாரண இன்ட்ரூடரைவிட இந்த ஸ்பெஷல் மாடல் ரூ.50,000 கூடுதல் விலையில் வந்துள்ளது.


Click it and Unblock the Notifications








