ரூ.47,610 ஆன்ரோடு விலையில் புதிய சுஸுகி லெட்ஸ் ஸ்கூட்டர்

By Saravana

ஆக்செஸ், ஸ்விஷ் என்ற இரு 125சிசி ஸ்கூட்டர் மாடல்களை சுஸுகி விற்பனை செய்து வருகிறது. இந்த நிலையில், ஹோண்டா நிறுவனம் புதிய 125சிசி ஆக்டிவாவை சமீபத்தில் விற்பனைக்கு கொண்டு வந்தது.

இதேபோன்று, 110 சிசி ஆக்டிவாவுக்கு போட்டியாக சுஸுகி நிறுவனம் புதிய லெட்ஸ் ஸ்கூட்டரை களமிறக்கியுள்ளது. டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த புதிய ஸ்கூட்டரின் விலை உள்ளிட்ட பல முக்கிய விபரங்கள் வெளியாகியுள்ளன.


போட்டி

போட்டி

ஆக்டிவாவுக்கு மட்டுமின்றி, யமஹா ஆல்ஃபாவுக்கும் போட்டியாக வந்துள்ள இந்த ஜப்பானிய ஸ்கூட்டரின் சிறப்பம்சங்களை அடுத்தடுத்த ஸ்லைடுகளில் காணலாம்.

எஞ்சின்

எஞ்சின்

இந்த புதிய சுஸுகி லெட்ஸ் ஸ்கூட்டரில் 112.8சிசி எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. இந்த எஞ்சின் 8.7 எச்பி பவரையும், 9 என்எம் டார்க்கையும் அளிக்கும். சிவிடி டிரான்ஸ்மிஷன் கொண்டது.

அசத்தலான மைலேஜ்

அசத்தலான மைலேஜ்

சுஸுகி லெட்ஸ் ஸ்கூட்டர் லிட்டருக்கு 63 கிமீ மைலேஜ் தரும் என்று சுஸுகி தெரிவித்துள்ளது. சுஸுகியின் ஈக்கோ பெர்ஃபார்மென்ஸ் எஞ்சின் தொழில்நுட்பம் இந்த மைலேஜை சாத்தியப்பட வைக்கும் என தெரிவிக்கப்படுகிறது.

மொபைல் சார்ஜர்

மொபைல் சார்ஜர்

ஆப்ஷனலாக மொபைல் சார்ஜர் வசதியும் இந்த ஸ்கூட்டரில் கிடைக்கிறது.

வடிவம்

வடிவம்

இந்த புதிய லெட்ஸ் ஸ்கூட்டர் 1,805 மிமீ நீளமும், 655 மிமீ அகலும், 1,120 மிமீ உயரமும் கொண்டது. இதேபோன்று, 160 மிமீ தரை இடைவெளி கொண்ட இந்த ஸ்கூட்டர் 98 கிலோ எடை கொண்டதாக இருக்கிறது.

சஸ்பென்ஷன்

சஸ்பென்ஷன்

முன்புறத்தில் டெலிஸ்கோப்பிக் ஃபோர்க்ககுகளும், பின்புறத்தில் ஸ்விங் ஆர்ம் வகையிலான மோனோ சஸ்பென்ஷனும் கொடுக்கப்பட்டுள்ளது. இருபுறத்திலும் 10 இஞ்ச் சக்கரங்களும், ட்யூப்லெஸ் டயர்களும் பொருத்தப்பட்டுள்ளது. மேலும், இருசக்கரங்களிலும் 120மிமீ டிரம் பிரேக்குகள் கொண்டுள்ளது.

வண்ணங்கள்

வண்ணங்கள்

நீலம், சில்வர், கருப்பு, சிவப்பு மற்றும் வெள்ளை என மொத்தம் 5 விதமான வண்ணங்களில் கிடைக்கும்.

விலை

விலை

ரூ.47,610 டெல்லி ஆன்ரோடு விலையில் இந்த புதிய சுஸுகி லெட்ஸ் ஸ்கூட்டர் விற்பனைக்கு கிடைக்கிறது.

More from DriveSpark

Article Published On: Wednesday, May 7, 2014, 8:13 [IST]
English summary
The Suzuki Let's automatic scooter has arrived. The new automatic scooter from the Japanese company was revealed ahead of the Auto Expo in February and it will be pitted against the mighty Activa, the TVS Wego and the Jupiter, and Yamaha Alpha.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+