புதிய சுஸுகி சுவிஷ் ஸ்கூட்டர் விற்பனைக்கு வந்தது - முழு விபரம்
புதுப்பொலிவுடன் கூடிய சுஸுகி சுவிஷ் ஸ்கூட்டர் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. முந்தைய மாடலைவிட பல்வேறு விதத்திலும் மேம்படுத்தப்பட்டு வந்திருக்கும் இந்த புதிய ஸ்கூட்டர் ஹோண்டா ஆக்டிவா 125 ஸ்கூட்டரை எதிர்கொள்ளும் விதத்தில் சிறப்பம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
2015 டொயோட்டா இன்னோவா காரின் ஆன்ரோடு விலை விபரம்!
வாடிக்கையாளர்களை கவரும் விதத்தில் சில கவர்ச்சிகர அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இந்த புதிய ஸ்கூட்டரின் சிறப்பம்சங்கள், படங்கள் மற்றும் ஆன்ரோடு விலை விபரம் உள்ளிட்ட கூடுதல் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

ஆன்ரோடு விலை விபரம்
டெல்லி: ரூ.56,482
பெங்களூர்: ரூ.63,540
மும்பை: ரூ.61,493

எஞ்சின்
புதிய சுஸுகி சுவிஷ் 125 ஸ்கூட்டரில் 8.58 எச்பி பவரையும், 9.8 என்எம் டார்க்கையும் அளிக்கும் திறன் கொண்ட 124சிசி எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இது சிவிடி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்டது.

சிறப்பம்சங்கள்
புதிய கிராஃபிக்ஸ் ஸ்டிக்கர்
ஸ்மார்ட் டிஜிட்டல் மீட்டர்
நீல வண்ண லென்ஸ் கொண்ட பொசிஷன் லைட்
ஆயில் சேஞ்ச் இண்டிகேட்டர்
அகலமான இருக்கை
ட்யூப்லெஸ் டயர்கள்
டெலிஸ்கோப்பிக் சஸ்பென்ஷன்
ஸ்டீல் ஃபென்டர்
ஷட்டர் கீ கொண்ட சென்ட்ரல் லாக் வசதி
மெயின்டனென்ஸ் ஃப்ரீ பேட்டரி
20 லிட்டர் கொள்ளளவு கொண்ட ஸ்டோரேஜ் வசதி
6 லிட்டர் கொள்ளளவு கொண்ட பெட்ரோல் டேங்க்

வண்ணங்கள்
இருவிதமான கிராஃபிக்ஸ் ஸ்டிக்கர் டிசைன் கொண்ட வெள்ளை மற்றும் கருப்பு என 4 வண்ணக்கலவையில் கிடைக்கும்.

பிரேக் சிஸ்டம்
முன்புறம் மற்றும் பின்புறத்தில் 120மிமீ டிரம் பிரேக்குகள் கொடுக்கப்பட்டுள்ளன.


Click it and Unblock the Notifications








