சுஸுகியின் புதிய வி- ஸ்ட்ரோம் 1000 பைக் அறிமுகம் - விபரம்
இந்தியாவில் சுஸுகியின் புதிய வி ஸ்ட்ரோம் 1000 பிரிமியம் மோட்டார்சைக்கிள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்த புதிய மோட்டார்சைக்கிள் இதன் ரகத்திலேயே குறைவான விலை கொண்ட மாடலாக விற்பனைக்கு வந்துள்ளது.

விற்பனை
பல்வேறு நாடுகளிலும் விற்பனைக்கு வந்துள்ள அதே நேரத்தில், இந்த புதிய தலைமுறை வி ஸ்ட்ரோம் பைக் இந்தியாவிலும் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

எஞ்சின்
சுஸுகி வி ஸ்ட்ரோம் பைக்கில் 99 பிஎஸ் பவரை வெளிப்படுத்தும் 1037சிசி வி ட்வின் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. முந்தைய தலைமுறை மாடலைவிட இந்த புதிய தலைமுறை மாடலில் பொருத்தப்பட்டிருக்கும் எஞ்சின் பவர் 2 பிஎச்பி கூட்டப்பட்டுள்ளது.

கையாளுமை
எந்த ஒரு சாலையிலும் செல்வதற்கும், எளிதான கையாளுமை கொண்ட பைக் மாடலாக இது இருக்கும். குறிப்பாக, இந்திய சாலைகளுக்கு இது ஏற்ற சாகச ரகத்திலான டூரர் பைக்காக இருக்கும். நீண்ட தூர பயணங்களுக்கு மிகச் சிறப்பானதாக இருக்கும் என இந்த பைக்கை அலசி பார்த்த ஆட்டோமொபைல் துறையினர் கருத்து தெரிவிக்கின்றனர்.

பெட்ரோல் டேங்க்
இந்த பைக்கில் 20 லிட்டர் கொள்ளளவு கொண்ட பெட்ரோல் டேங்க் பொருத்தப்பட்டுள்ளது.

விலை
ரூ.14.5 லட்சம் டெல்லி எக்ஸ்ஷோரும் விலையில் இந்த புதிய மோட்டார்சைக்கிள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. தற்போது முன்பதிவு துவங்கப்பட்டுவிட்ட நிலையில், விரைவில் டெலிவிரியும் துவங்கப்பட உள்ளது. இது இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட உள்ளது.


Click it and Unblock the Notifications








