இந்தியாவில் புதிய 250சிசி பைக்கை களமிறக்கும் டிரையம்ஃப்

கவாஸாகி நின்ஜா 250ஆர் , ஹோண்டா சிபிஆர் 250ஆர் மற்றும் ஹயோசங் 250ஆர் பைக்குகள் மட்டுமே இந்த மார்க்கெட்டில் இருக்கின்றன.
இந்த நிலையில், பிரிட்டிஷ் பிராண்டும் இந்த களத்தில் குதிப்பது மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ஸ்ட்ரீட் டிரிபிள் நேக்டு பைக்கின் அடிப்படை வடிவமைப்புடன் புதிய 250சிசி பைக் இந்தியா வருகிறது.
மேலும், இந்தியாவிலேயே இந்த புதிய 250சிசி பைக்கை அசெம்பிள் செய்ய உள்ளது டிரையம்ஃப். இதனால், போட்டியாளர்களுக்கு சவாலான விலையில் இந்த புதிய பைக் வர இருக்கிறது.
இந்தியாவில் தயாரிக்கப்படும் இந்த பைக்கை இங்கிருந்து ஆசிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவும் டிரையம்ஃப் முடிவு செய்துள்ளது. ஹோண்டா சிபிஆர் 250ஆர் ஆதிக்கத்தில் இருக்கும் இந்த மார்க்கெட்டில் டிரையம்ஃப் ஆதிக்கம் எடுபடுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.


Click it and Unblock the Notifications








