10 லட்சம் டிவிஎஸ் அப்பாச்சி பைக்குகள் விற்பனையாகி சாதனை
இதுவரை 10 லட்சம் டிவிஎஸ் அப்பாச்சி பைக்குகள் விற்பனையாகி சாதனை படைத்திருக்கிறது. கடந்த 2007ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட அப்பாச்சி தற்போது ஆர்டிஆர் 160, ஆர்டிஆர் 180 மற்றும் ஆர்டிஆர் 180ஏபிஎஸ் ஆகிய மூன்று விதமான வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படுகிறது.
டிவிஎஸ் நிறுவனத்துக்கு மிக முக்கியமான மாடலாக இருந்து வரும் அப்பாச்சி வாடிக்கையாளர் மத்தியிலும் நன் மதிப்பை பெற்றுள்ளது. இந்த நிலையில், அப்பாச்சியின் ஒரு மில்லியன் சாதனையை கொண்டாடும் விதமாக புதிய ஸ்பெஷல் எடிசன் அப்பாச்சியை டிவிஎஸ் அறிமுகப்படுத்த உள்ளது. . எஞ்சினில் எந்த மாற்றங்களும் இல்லாமல் காஸ்மெட்டிக் மாற்றங்களுடன் புதிய அப்பாச்சி வரும் என தெரிகிறது. டிவிஎஸ் மோட்டார்ஸ் வெளியிட்டிருக்கும் ஸ்பெஷல் எடிசனாக வர இருக்கும் அப்பாச்சியின் டீசர் படங்களை ஸ்லைடரில் காணலாம்.

டிவிஎஸ் அப்பாச்சி டீசர்

டிவிஎஸ் அப்பாச்சி டீசர்

டிவிஎஸ் அப்பாச்சி டீசர்

டிவிஎஸ் அப்பாச்சி டீசர்

டிவிஎஸ் அப்பாச்சி டீசர்



Click it and Unblock the Notifications








