ரூ.44,000 விலையில் புதிய 110சிசி ஸ்கூட்டர்: டிவிஎஸ் அறிமுகம்
புதிய 110சிசி திறன் கொண்ட டிவிஎஸ் ஸ்கூட்டர் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சென்னையில் நடந்த விழாவில் ஜூபிடர் என்ற பெயரிலான இந்த புதிய ஸ்கூட்டர் விற்பனைக்கு விடப்பட்டது.
ஹோண்டா ஆக்டிவா, டியோ, யமஹா ரே உள்ளிட்ட ஸ்கூட்டர்களுக்கு போட்டியாக வந்திருக்கும் இந்த புதிய 110சிசி ஸ்கூட்டர் குறித்த கூடுதல் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

எஞ்சின்
வீகோ ஸ்கூட்டரில் இருக்கும் அதே 110சிசி எஞ்சின்தான் ஜூபிடரிலும் பொருத்தப்பட்டிருக்கிறது. இந்த எஞ்சின் 8 பிஎச்பி சக்தியையும், 8 என்எம் டார்க்கையும் அளிக்கும்.

பெர்ஃபார்மென்ஸ்
0 - 96 கிமீ வேகத்தை வெறும் 7.2 வினாடிகளில் எட்டிவிடும்.

மைலேஜ்
ஜூபிடர் ஸ்கூட்டர் லிட்டருக்கு 62 கிமீ மைலேஜ் தரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொருட்களுக்கு இடவசதி
இருக்கைக்கு கீழே 17 லிட்டர் கொள்ளளவு கொண்ட பொருட்கள் வைப்பதற்கான இடவசதி கொடுக்கப்பட்டுள்ளது. இருக்கைக்கு கீழே மொபைல் சார்ஜர் வசதியும் உள்ளது.

பெட்ரோல் டேங்க்
5.3 லிட்டர் கொள்ளளவு கொண்ட பெட்ரோல் டேங்க் இருக்கிறது.

சஸ்பென்ஷன்
முன்புறம் டெலிஸ்கோப்பிக் சஸ்பென்ஷனும், பின்புறத்தில் ஸ்பிரிங் லோடட் கேஸ் சார்ஜ்டு சஸ்பென்ஷனும் கொடுக்கப்பட்டுள்ளது.

வண்ணங்கள்
வெள்ளை, சிவப்பு, சாம்பல் மற்றும் கருப்பு ஆகிய 4 வண்ணங்களில் கிடைக்கும்.

விற்பனை இலக்கு
மாதத்துக்கு 35,000 முதல் 50,000 ஜூபிடர் ஸ்கூட்டர்களை விற்பனை செய்ய டிவிஎஸ் இலக்கு நிர்ணயித்துள்ளது. முதலில் வட இந்தியாவிலும், பின்னர் தென்னிந்தியாவிலும் விற்பனைக்கு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








