வெஸ்பா எலிகன்ட் லிமிடேட் எடிசன் அறிமுகம்- விலை விபரம்
புதிய வெஸ்பா எலிகன்ட் லிமிடேட் எடிசன் மாடல் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. பண்டிகை காலத்தை முன்னிட்டு இந்த புதிய மாடலை பல பிரத்யேக அம்சங்களுடன் இந்த புதிய வெஸ்பா மாடல் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
வழக்கம்போல் பிற வெஸ்பா ஸ்கூட்டர்களை போன்று பிரிமியம் ரகத்தில் வந்திருக்கும் இந்த புதிய மாடலை இளைஞர்களை குறிவைத்து களமிறக்கி இருப்பதாக பியாஜியோ நிறுவனம் தெரிவித்துள்ளது. வெஸ்பா எலிகன்ட் ஸ்கூட்டரின் சிறப்பம்சங்கள், விலை விபரத்தை ஸ்லைடரில் காணலாம்.

வண்ணங்கள்
வெஸ்பா எலிகன்ட் இரண்டுவிதமான மெட்டாலிக் வண்ணங்களில் கிடைக்கும். மேரோன் க்ரெட் சென்சி மற்றும் பையன்கோ பெர்லா ஆகிய வண்ணங்களில் கிடைக்கும்.

புதிய முகப்பு
இந்த ஸ்கூட்டரின் முகப்பில் மாற்றங்கள் செய்யப்பட்டிருப்பதுடன் க்ரோம் அலங்காரத்தில் ஜொலிக்கிறது. வட்டவடிவ ஹெட்லைட் உள்ளதுடன், முன்பக்க பம்பருக்கு குரோம் கார்டு கிட் கொடுக்கப்பட்டுள்ளது. லிமிடேட் எடிசன் பேட்ஜ் பொறிக்கப்பட்டிருப்பதுடன், அதற்கு தகுந்தவாறான ஹெல்மெட்டும் வழங்கப்படுகிறது.

எஞ்சின்
இந்த புதிய மாடலிலும் 125சிசி பெட்ரோல் எஞ்சின்தான் பொருத்தப்பட்டிருக்கிறது.

இதர அம்சங்கள்
டிஸ்க் பிரேக்குகள் ட்யூப்லெஸ் டயர்கள், அலாய் வீல்கள் போன்றவை இதர அம்சங்களாக கூறலாம். மேலும், தனித்தனி இருக்கைகள் கொடுக்கப்பட்டுள்ளன.

விலை
ரூ.78,999 டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையில் இந்த புதிய வெஸ்பா எலிகன்ட் லிமிடேட் எடிசன் மாடல் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








