இரட்டை வண்ண வெஸ்பா ஸ்கூட்டர்: ரூ.6,000 செலவாகும்
வெஸ்பா ஸ்கூட்டருக்கு இரட்டை வண்ண பேனல்கள் மற்றும் பாகங்களை சில பியாஜியோ டீலர்கள் விற்பனை செய்கின்றனர். இதற்கு ரூ.6,000 வரை அவர்கள் பெறுவதாக பிரபல ஆட்டோமொபைல் தளமான மோட்டோராய்ட்ஸ் தெரிவித்துள்ளது. லைஃப் ஸ்டைல் ஸ்கூட்டராக நிலைநிறுத்தப்பட்ட வெஸ்பா எல்எக்ஸ்12 ஸ்கூட்டரின் தோற்றத்தை இந்த இரட்டை வண்ண கலவை கூடுதல் கவர்ச்சி கொண்டாதாக மாற்றியுள்ளது.
பியாஜியோ இந்த இரட்டை வண்ண பேனல்களை அதிகாரப்பூர்வமாக விற்பனை செய்யவில்லை. ஆனால், டீலர்கள் ஆர்டர் செய்து இவற்றை கூடுதல் ஆக்சஸெரீயாக பெற்று தருகின்றனர். முன்பக்க ஃபென்டர், மட்கார்டு, புட்போர்டு, எஞ்சின் கவர் ஆகியவற்றை பிடித்த கலரில் தேர்வு செய்து வாங்கிக்கொள்ளலாம். ஆனால், இது எல்லா டீலரிலும் கிடைப்பது குறித்து சந்தேகம் இருக்கிறது. இதுதவிர, ஓபன் ஃபேஸ் ஹெட்மெல்ட்டையும் டீலர்கள் விற்பனை செய்கின்றனர். இதன் விலை ரூ.2,650 என தெரிவிக்கப்பட்டுள்ளது. இரட்டை வண்ணத்தில் அசத்தும் வெஸ்பா ஸ்கூட்டரை ஸ்லைடரில் காணலாம்.

இரட்டை வண்ண வெஸ்பா ஸ்கூட்டர்

இரட்டை வண்ண வெஸ்பா ஸ்கூட்டர்

இரட்டை வண்ண வெஸ்பா ஸ்கூட்டர்

இரட்டை வண்ண வெஸ்பா ஸ்கூட்டர்

இரட்டை வண்ண வெஸ்பா ஸ்கூட்டர்

இரட்டை வண்ண வெஸ்பா ஸ்கூட்டர்

இரட்டை வண்ண வெஸ்பா ஸ்கூட்டர்



Click it and Unblock the Notifications








