ஐரோப்பாவில் யமஹாவின் புதிய ஸ்கூட்டர் அறிமுகம் - விபரம்
ஐரோப்பிய மார்க்கெட்டில் புதிய ஸ்கூட்டரை யமஹா நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. டிலைட் என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்த புதிய ஸ்கூட்டர் வெஸ்பா ஸ்கூட்டர்களுக்கு நேரடி போட்டியை கொடுக்கும் சிறப்பான டிசைனுடன் களமிறங்கி இருக்கிறது.
குறைந்த சிசி திறன் கொண்ட ஸ்கூட்டர்களுக்கு மேலை நாடுகளில் அதிக வரவேற்பு இருக்காது. இருப்பினும், அங்கு தற்போது நிலவும் பொருளாதார சுணக்க நிலை காரணமாக அதிக மைலேஜ் தரும் ஸ்கூட்டர்களுக்கு நிச்சயம் வரவேற்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இந்த புதிய ஸ்கூட்டரை யமஹா விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது.

டிசைன்
வெஸ்பா போன்றே 1960களின் டிசைன் கான்செப்ட்டை வைத்து (ரெட்ரோ ஸ்டைல் டிசைன்) டிலைட் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதாவது, ஹெட்லைட், இன்டிகேட்டர் விளக்குகளின் டிசைன் போன்றவற்றை குறிப்பிடலாம். முன்புறம் மார்பில் அணிகலன்களை தொங்கவிட்டது போன்ற அச்சு கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

எஞ்சின்
இந்த புதிய ஆட்டோமேட்டிக் ஸ்கூட்டரில் 114சிசி 4 ஸ்ட்ரோக் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. யமஹாவின் மிக்சர் ஜெட்- ஃப்யூல் இன்ஜெக்ஷன் (Mixture Jet-Fuel Injection) தொழில்நுட்பத்துடன் வந்திருக்கிறது.

பெர்ஃபார்மென்ஸ்
98 கிலோ எடை கொண்ட இந்த ஸ்கூட்டரின் எஞ்சின் அதிகபட்சமாக 7.7 என்எம் டார்க்கை வெளிப்படுத்தும் திறன் கொண்டது. மேலும், இதன் இருக்கை உயரம் தரையிலிருந்து 755மிமீ என்பதால் போக்குவரத்து நெரிசல்களில் எளிதாக கால் ஊன்ற ஸ்கூட்டரை லாவகமாக ஓட்ட முடியும்.

டர்னிங் ரேடியஸ்
இதன் டர்னிங் ரேடியஸ் 1.8 மீட்டர் மட்டுமே என்பதால் திருப்புவதும் எளிது. ஆனால், வெஸ்பா ஸ்கூட்டர்களைவிட இது அதிகம் என்பதையும் கூறவேண்டும்.

வசதிகள்
ஹெல்மெட் மற்றும் பொருட்களை வைப்பதற்கு இருக்கைக்கு கீழே இடவசதி உள்ளது. முன்புறத்தில் சிறிய கிளவ் பாக்ஸ் மற்றும் பெட்ரோல் நிரப்புவதற்கான மூடியும் கொடுக்கப்பட்டுள்ளது.

டிஸ்க் பிரேக்
முன்புறத்தில் 180மிமீ டிஸ்க் பிரேக் மற்றும் 12 இஞ்ச் 3 ஸ்போக்குகள் கொண்ட அலாய் வீல்கள் பொருத்தப்பட்டுள்ளன.

கிராப் ரெயில்
பின்னால் அமர்ந்திருப்பவர்கள் பிடிப்பதற்கு வசதியாக கிராப் ரெயில் பிடிகள் உள்ளன. இவை ஸ்கூட்டரின் பாடி கலரிலேயே கொடுக்கப்பட்டுள்ளது.

விலை
இந்த புதிய ஸ்கூட்டர் ரூ.1.63 லட்சம் விலையில் இங்கிலாந்து மார்க்கெட்டில் விற்பனைக்கு வந்துள்ளது.

இந்தியாவுக்கு வருமா?
ஐரோப்பிய மார்க்கெட்டில் யமஹா நிறுவனம் 50சிசி முதல் 530சிசி வரையிலான மொத்தம் 30 மாடல்களை யமஹா விற்பனை செய்கிறது. அதேவேளை, இந்தியாவில் தற்போது ரே ஸ்கூட்டரை மட்டுமே விற்பனை செய்து வருகிறது. ரே ஸ்கூட்டரின் இசட் என்ற மாடலை சமீபத்தில்தான் அறிமுகம் செய்தது. அதுவும் புதிய ஸ்கூட்டர் இல்லை. அதேவேளை, அதிக அளவில் இந்தியாவிலும் ஸ்கூட்டர் மாடல்களை யமஹா அறிமுகம் செய்யும் வாய்ப்பு இருக்கிறது. அதுவும் அதிக மைலேஜ் தரும் ஆட்டோமேட்டிக் ஸ்கூட்டர்களுக்கு இந்தியாவில் மவுசு அதிகம் இருப்பதால் யமஹா டிலைட் இந்தியாவில் அறிமுகம் செய்யும் வாய்ப்பு இருக்கிறது.


Click it and Unblock the Notifications








